Wednesday, December 5, 2018

சபாநாயகரின் விஷேட செய்தி

2018-12-3ம் திகதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் 26 ம் திகதியில் இருந்து நடந்த அரசியல் மாற்;றங்களை கவனத்தில் எடுப்பது எமது கடமையாகும். அதேபோல் பாராளுமன்றத்தில் செயற்பாடுகளை திரும்பி பார்ப்பதற்கான சந்தர்ப்பம் இதுவாகும்.

மேற்குறிப்பிட்ட மாற்றம் நடைப்பெற்ற மறுதினம் சபாநாயகர் கௌரவ ஜனாதிபதியை சந்தித்து பேசிய போது ஜனாதிபதியின் முடிவு பாராளுமன்ற சட்டதிட்டங்களுக்கும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரண்பட்டதாயினும் அவரின் விஷேட வேண்டுகோளுக்கு இணங்க பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் வழங்க பிரதம செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

புதிய அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை 7 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. உள்நாட்டிலும் சர்வதேசத்தின் பார்வைக்கும் வெளிப்படுத்துவது ஜனாதிபதியின் கடமையாகும்.

நவம்பர் 7ம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சித்தாலும் அன்றைய தினம் தோல்வி கண்ட நிலையில் 14ம் திகதி மீண்டும் கூட்டப்பட்டபோது 122 உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்தனர். இந்நிலையிலேயே அமைச்சர்கள் பேரம் பேசப்பட்டனர். 300மில்லியனுக்கு மேலான பணத்திற்கு அமைச்சு பதவிகளை விற்கும் நிலையை உருவாக்கி இருந்தமை நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையை விசாரணை செய்ய லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினை நியமித்தமை குறித்து மகிழ்ச்சி அடைகின்றோம்.

நவம்பர்14ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்பட்டமையானது 136 கட்டளைச் சட்டம் மற்றும் 143 கட்டளை சட்டத்தின் அடிப்படையிலேயே. ஆனாலும் 14 15 16 திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம் பெற்ற அமளிதுமளியால் வாக்கெடுப்பு குரல் முலமே நடைப்பெற்றது.

டீசம்பர் 3ம் திகதி உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பானது எமது எதிர்ப்பார்ப்பின் அடிப்படையிலேயே இடம் பெற்றுள்ளது. சிறந்த தீர்ப்பினை வழங்கிய உயர்நீதி மன்றத்திற்கு தலைவணங்குகின்றோம். இதன் மூலம் சபாநாயகருக்கும் பாராளுமன்றத்திற்கும் எதிரான விமர்சனங்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் ஜனநாயக ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையிலேயே பாராளுமன்ற நடவடிக்கைகள் நடந்தேறியுள்ளன. தனிப்பட்ட நபரை அல்லது குழுவினரை பலப்படுத்துவதோ பலவீனப்படுத்துவதோ சபாநாயகரின் கடமை இல்லை. சபாநாயகரை பதவி நீக்க வேண்டுமாயின் முறைப்படி பதவி நீக்கலாமே ஒழிய ஆங்காங்கே விமர்சனம் செய்யத் தேவயில்லை.

இறுதியாக இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரம் அரசியல் சமூகம் எல்லாம் பின்னடைவை நோக்கிய சென்று கொண்டிருக்கிறது என்பதனை கௌரவ ஜனாதிபதி உட்பட அனைவரும் கருத்தில் கொள்ளல் வேண்டும்.

தாய் நாட்டினை மீட்க ஜனநாயக ரீதியான அரசாங்கத்தை ஸ்தாபித்து சமாதானமான சூழ்நிலையை ஏற்படுத்துவது எமது கடமையாகும். எதிர்வரும் பாராளுமன்ற தொடரின் போது அமைதியான முறையில் செயற்பட கட்சி தலைவர்கள் கவனம் செலுத்தல் வேண்டும்.

மேற்குற்ப்பிட்ட எமது கருத்துக்கள் அனைத்தும் சுயநலத்திற்காகவோ பக்கசார்பிற்காகவோ முன்வைத்தவை அல்ல. மான்புமிகு ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டினை முன்னேற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற பிரார்த்தனை மட்டுமே எம் எண்ணத்தில் உள்ளது.

சபாநாயகர் காரியாலயம்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com