திங்கள் புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம்.
எதிர்வரும் நாட்களில் பெரும்பாலும் திங்கள் கிழமை புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம் என பரவலான ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த ஜனாதிபதி மைத்திரபால நீதிமன்றத்தீர்ப்பின் பிரகாரம் புதிய அமைச்சரவை ஒன்றை நியமிக்க வேண்டியதன் கட்டாயத்தை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்ததாக அறியமுடிகின்றது.
இதேநேரம் சபாநாயகர் கரு ஜெயசூரியவை தனியாக சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதில் தனக்குள்ள சிக்கல்களை விளக்கி மாற்று தேர்வு ஒன்றை நாடியபோதும், அதற்கு சாதகமான பதில் கரு ஜெயசூரியவிடமிருந்து கிடைக்கவில்லை என்றும் அந்த வகையில் சில நிபந்தனைகளுடன் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றிருப்பதால் தொடர்ந்தும் அவரையே பிரதமராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் ஒருவர் ஊடகமொன்றிற்று தெரிவித்துள்ளார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
அத்தோடு தனது கட்சி தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பாடாது எனவும் ஸ்ரீலங்கா சு.கட்சியில் எவரோனும் ஐக்கிய தேசிய கூட்டமைப்புடன் இணைவர்களாயின் அவர்களுக்கு எதிராக எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment