Monday, November 19, 2018

பிரதமர் அலுவலக நிதியை முடக்குவதற்கு பிரேரணை.

பாரளுமன்றின் நம்பிக்கையில்லா பிரேரணையின் ஊடாக பிரதமர் பதவி நீக்கப்பட்டிருக்கின்றார் என்ற அடிப்படையில், பிரதமரின் செயலாளரிற்கு அரசாங்க பணத்தை பாவிப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தெரிவித்து பிரேரணை ஒன்று பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் இன்று (19) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையை இன்று ஒப்படைப்பதாக கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் போது பாராளமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.

இதேவேளை குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விவாதங்கள் மூன்று நாட்கள் இடம்பெற்று வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் தற்போது, பெரும்பாண்மை உள்ள நிலையில் பிரேரணை நிறைவேற சாத்தியக்கூறுகள் நிறையவே காணப்படுகின்றது.

குறித்த பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர்களான நவின் திஸாநாயக்க, ரவி கருணாநாயக்க, ஹெக்டர் அப்புஹாமி, சதுர சேனாரத்ன ஆகியோர் பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஒப்படைத்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com