Monday, November 12, 2018

ட்ரம்பின் வாகனத்தின் முன்னால் நிர்வாணப் போராட்டம் நடத்திய பெண்ணால் பாரிஸில் பரபரப்பு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்துள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாகன அணிவகுப்பு முன்பு இளம் பெண்கள் இருவர் மேலாடையை கழற்றி எறிந்து அரை நிர்வாணமாக ஓடிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செயல்படுத்தி வரும் பல்வேறு கொள்கைகளுக்கு உலகம் முழுவதுமே எதிர்ப்பு நிலவி வருகிறது. வெளிநாட்டு தொழிலாளர்கள், அகதிகளுக்கு கெடுபிடி, மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளிவர்வகளுக்கு கட்டுபாடு, குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் வர தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் அவருக்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் பிரான்ஸ் வருகை தந்துள்ள ட்ரம்ப், பாரிஸ் நகரில் நடந்த முதல் உலகப்போர் நினைவு தினத்தில் பங்கேற்றார். பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ அவரது வாகனம் பாரிஸ் நகரில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென இளம் பெண் ஒருவர் தனது மேலாடையை கழற்றி வீசியபடி ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார். அவரை தொடர்ந்து மேலும் ஒரு பெண் அதேபோன்று மேலாடையை கழற்றி எறிந்தவாறு ஓடி வந்தார்.

உடனடியாக பிரான்ஸ் போலீஸார் அவரை சுற்றி வளைத்தனர். ஆனால் மற்றொரு இளம் பெண் போலீஸுக்கு பிடிகொடுக்காமல் நிர்வாணத்துடன் கீழே விழுந்துபடி தொடர்ந்து கோஷம் எழுப்பினர். பின்னர் போலீஸார் அவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனால் ட்ரம்ப் வாகன அணிவகுப்பில் பதற்றம் ஏற்பட்டது.

ட்ரம்புக்கு எதிப்பு தெரிவித்து பாரிஸ் பெண்ணிய இயக்கங்கள் போராட்டங்கள் அறிவித்து இருந்தன. நிர்வாண போராட்டம் நடத்திய பெண் அந்த அமைப்பை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. ட்ரம்ப் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைபாடு இருந்ததாக புகார் எழுந்துள்ளது.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com