Monday, November 19, 2018

ரெலோவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் பகிரங்க மடல்!

ரெலோ இயக்த்தின் தற்போதைய மற்றும் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றார் சோதிலிங்கம். முன்னாள் ரெலோ உறுப்பினரான அவர் அவ்வியக்த்தின் முறைகேடுகள் தொடர்பில் கடந்த சிலவாரங்களாக வாரந்தம் ஒரு கடிதத்தை தனது அமைப்பின் தலைமையை நோக்கி எழுதுகின்றார்.

ரெலோ அமைப்பு தற்போது தனி நபர்களின் மட்டுப்படுத்தப்பட்ட ஸ்தாபனமாகியுள்ளதாக குறிப்பிடும் சோதிலிங்கத்தின் கடிதத்தில் பல்வேறு உள்வீட்டு விவகாரங்கள் அம்பலமாகின்றது.

எழுச்சி, 19/11/2018 (கடிதம்05, மாதம்11, கிழமை 03)

தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.

தமிழீழ விடுதலை இயக்கம், இலங்கை.

போராடிய இனத்தின் பிரதிநிதிகளாக உங்கள் அரசியல் மக்களுக்கான தலைமையாக இல்லை என்பதையிட்டு மனவருத்தமாக உள்ளது.

அண்மைக்காலமாக ரெலோவினால் இயக்கப்படும் அரசியல் என்பது ஒரு சிலர் தமது சுய நலங்களை திருப்திப்படுத்துவதாகவும் தமிழ் மக்களுக்கு எந்த பிரயோசனத்தையோ , ஆழுமையேயோ தரவில்லை என்பது மட்டுமல்லாமல் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான குரலாகவும் இருக்கவில்லை என்பது வேதனையானது, இக்கருத்தில் மாற்றுக்கருத்து இருக்காது என்பது வெளிப்படையானது (நாம் ஆய்வுக்கு தயார்).

அண்மைக் காலங்களில் இலங்கையில் ஏற்படும் அரசியல் சிக்கலாக எழுந்திருக்கும் நிலைமைகளை தமிழர்களின் அரசியல் உரிமைகளின் அங்கீகாரத் தவறுகளையும், கடந்த காலங்களில் தமிழர்கள் மீதான தாக்குதல்களாக வெளிவந்த இனக் கலவரங்களை செய்ய முடியாது போய் பாராளுமன்ற உறுப்பினர்களின் சண்டையாக மாறியுள்ளதை தெளிவுபடுத்தும் அரசியல் ஆழுமையை ரெலோ தவறியுள்ளது.

தமிழர்கள் மீது இனவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்ட கட்சிகள் இன்று தம்மிடையே மோதுவதின் உள்ளார்த்தத்தை புரிய "விடுதலை இயக்கம்" எப்படி தவறுவது? இயக்கத்தின் அரசியல் புரிதல் இன்மையையே வெளிப்படுத்துகின்றது.

ரெலோ தவறியது மட்டுமல்லாது மக்களை மறந்து பிற்போக்கு நிலைகளுக்கு ஆதரவாகவும், கடந்த கால இலங்கை அரசின் இனவாத நடவடிக்கைகளுக்கும் பாராளுமன்றத்தில் நடைபெற்ற சண்டைகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்த "தமிழீழ விடுதலை இயக்கம் " தவறி விடுதலை இயக்கத்தின் பெயருக்கு இழுக்கு ஏற்ப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி இயக்கத்தில் ஒரு சில தனிப்பட்டவர்களினால் மக்களுக்கான இயக்க இயங்கு முறை தவற விடப்படுகிறதை தெரிவிக்க விரும்புகிறோம்.

மக்களின் பக்கத்திலிருந்து சிந்திக்கும் அரசியலை முயற்சிக்க வேண்டிய அவசியம் எம் முன்னால் உள்ளது.

நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.

த சோதிலிங்கம்.
19/11/2018.

தொர்புகள்:
uktelo@gmail.com
telolondon@gmail.com


எழுச்சி, 12/11/2018 (கடிதம்04, மாதம்11, கிழமை 02)

தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.

தமிழீழ விடுதலை இயக்கம், இலங்கை.

தமிழீழ விடுதலை இயக்கம் தனது 1984 ம் ஆண்டுகளின் கைக்கூலி, கைநாட்டு அரசியலிலிருந்து வெளியே வர வேண்டும்.

தமிழீழ விடுதலை இயக்கம் இயக்கத்தின் இன்றய அரசியல் இயக்கம் என்ன என்ற வெளிப்படையான தகவலற்றும் , தமிழர் உரிமைப் போராட்டம் தொடர்பான நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்காமலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைக்கு பின்னால் வால்பிடிக்கும் அரசியலையே ரெலோவின் அரசியல் என்ற பொது மக்கள் அபிப்பிராயம் வளர்க்கப்பட்டு விட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் அரசியலுக்கும் வெகுதூரம் என்ற பொதுக் கோட்பாட்டுக்கு இதர அரசியல் கட்சிகள், அரசியலில் இயங்கும் தோழர்களும் கருத்து கொண்டுள்ளதை காண்கிறோம்.

தமிழீழ விடுதலை இயக்கம் 1983 க்கு பின்னர் இந்திய உதவியுடன் குறிப்பாக இந்திய இராணுவ தலையீட்டின் மூலம் இந்திய மக்களின் நலனுக்கு உட்டபட்ட தமிழர் அரசியல் அரிமைகளுக்காக இந்தியாவுடன் இணைந்து கிளர்ச்சி இயக்கமாக இயங்கி தமிழர்களின் அபிலாசைகளை பெறுதல் என்பதே நோக்கமாக செயல்பட்டு வந்திருந்தது.

அது பின்னர் புலிகளினால் உடைக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்ட பின்னர். ரெலோ மக்களுக்கான தனது அரசியல் நிலைப்பாடு என்ன என்பதையோ, மக்களுக்காக எப்படி இயங்குவது என்பது பற்றியோ எங்கும் எந்த கருத்தையும் முப்பது வருடங்களாக முன்வைக்க வில்லை.

அண்மைக்கால இலங்கை அரசின் குழப்பங்களின் போதும் ரெலோ தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது கூட்டமைப்பின் பின்னால் நின்றது. அடுத்த நாள் மக்கள் ஆணை தந்தால் மகிந்தாவை ஆதரிப்போம் என்ற கூற்று ரெலோவின் அரசியல் திராணியற்ற பண்பையே வெளிப்படுத்தியுள்ளது.

ரெலோ தனது 1983 கைக்கூலி, கைநாட்டு அரசியலிலிருந்து வெளியேறி விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பண்புகளுடன் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வெற்றெடுக்கும் அரசியலை வெளிப்படுத்தி இயங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.

த சோதிலிங்கம்.
12/11/2018.

தொர்புகள்:
uktelo@gmail.com
telolondon@gmail.com


எழுச்சி /29/10/2018 (கடிதம்02, மாதம்10, கிழமை04)

தமிழீழ விடுதலைஇயக்கம்
இலங்கை.

நாட்டில் ஏற்ப்படும் அரசியல் மாற்றங்களில் மாற்று அரசியலையே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.- கடிதம்:

இலங்கையில் காலத்துக்கு காலம் ஏற்ப்பட்டு வந்த சிங்கள தரப்பு அரசியல் மாற்ங்களும் அந்த அவர்கள் விரும்பும் அரசாங்க மாற்றத்துக்காக தமிழர்கள் மீது சச்சரவுகளை அவிழ்த்து விட்டே வெற்றி பெறும் நிலையில் இருந்தனர் , அண்மைக்கால இலங்கை அரசியல் அது போன்ற நிலைமைகளிலிருந்து மாற்றம் பெற்றுள்ள போதும், தமிழ் தலைமைகள் நலிவடைந்திருப்பது துர் அதிட்டமேயாகும்.

அண்மைய இலங்கை அரசியல் மாற்றத்திற்கான பதில் வழங்குதலை தமிழ் போராட்ட இயக்கங்களுடன் இணைந்த பொது முடிவு எடுப்பதையே அரசியல் தோழர்களின் எதிர்பார்ப்பாகும்.

கடந்த சில 5வருட காலங்களில் ரெலோ இயக்கம் அகத்தே எடுக்கப்படும் முடிவுகள் ஒரு சில உறுப்பினர்கள் மட்டும் எடுத்து வெளியிட்டிருந்தது பொதுவெளியில் தெரிந்தவிடயம் இந்த முடிவுகள் தலைமையில் சிலர் தமது சுய நலத்தின் அடிப்படையிலும் கட்சியின் பொது முடிவுக்கு உட்படாமலும் எடுக்கப்பட்டிருந்தது என்பது ரெலோவின் உள் இன்றும் கொதித்துக் கொண்டிருப்பதை அறிகின்றோம்.

மேற் கூறிய விடயம் விடுதலைப் போராட்ட இயக்கத்தின் அல்லது பொது அமைப்பின் நடைமுறைக்கு எதிரானது என்பதை தெளிவுபடுத்தி கடந்த இரண்டு நாட்களுக்குள் நடைபெற்ற மாற்றத்தை ரெலோ தனது கட்சியினுள்ளும், இதர போராட்ட இயக்கங்களுடனும் இணைந்து மேற் கொள்ளப்பட வேண்டும் எனவும் எதிர் பார்க்கிறோம்.

மிதவாத கட்சிகள் போல் அன்றி ஒரு வீடுதலைப் போராட்ட இயக்கத்துக்குரிய நிலைப்பாட்டினை உயர்த்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி.

முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.

த சோதிலிங்கம்.
29/10/2018.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com