Wednesday, November 21, 2018

இராணுவத்தை வடகிலிருந்து அகற்றினால் மக்களுக்கு போக இடமில்லாமல் போகுமாம். வைத்தியர் கிறிஸான்.

இராணுத்தை வடக்கில் இருந்து அகற்ற கூறுகின்றார்கள். அவ்வாறு அவர்களை அகற்றினால் தமிழ் மக்களுக்கு போவதற்கு இடமில்லாமால் போகும் என சிறுநீரக சிறப்பு வைத்தியர் கிறிஸான் தெரிவித்துள்ளார்.

உலக இலங்கையர் பேரவையின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில் :

புலிகளால் உடைத்து சிதைக்கப்பட்ட ஆலயங்களை தென்பகுதி மக்களிடம் பெற்றுக்கொண்ட நன்கொடையைக் கொண்டு, எங்களைப் போன்ற அமைப்புகளையும் இனைத்துக் கொண்டு இராணுவத்தினர் புனருதாரணம் செய்துவருவதுடன் புதிய ஆலயங்களை கட்டியும் வருகின்றனர். ஆனால் விகாரைகளை அமைத்தால் உடைக்கச் சொல்கிறார்கள்.

இன்றைய அரசாங்கம் இதைப்பற்றி பேச வேண்டும். எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு கொழும்பில் வாழ முடியும் என்றால், விக்னேஷ்வரனின் மகன் வாசுதேவ அவர்களின் மகளை திருமணம் முடிக்க முடியும் என்றால், சுமந்திரனுக்கு கொழும்பிலே வியாபாரம் செய்ய முடியும் என்றால் ஏன் ஏனையோருக்கு முடியாது.

நான் ஒரு விடயக்தை ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன். 800 கோடி பணத்திற்கு நடந்தது என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் இராணுவத்தினர் மட்டமே இங்கு செயற்படுகின்றனர்.

இங்கு ஒரு கொலை நடந்து விட்டால் புலம்பெயர் தமிழருக்கு 100 கொலை நடந்ததாக மிகைப்படுத்தி கூறுகின்றனர். கண்துடைப்பு வேலைகளில் இவர்கள் ஈடுபடுகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இவற்றுக்கு தரகர்களாக செயற்படுகின்றனர். இவர்கள் உரைப்பது யாவும் பொய்யான விடயங்களே.

இராணுவத்தினரின் நடவடிக்கைதளை நோக்கும்போது தென்னை மரங்கள் 30000மும் பனை 20000நாட்டியுள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கு பொருட்களை வழங்கியுள்ளனர். கண் நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை செய்துள்ளனர்.

இன்று வாய்ச் சொல்லில் வீரம் பேசுபவர்களுக்கு மக்கள் நீரில்லாமல் கஷ்டப்படுவது தெரியாது. இராணுவத்தின் முயற்சியாலேயே மக்களின் நலன்கள் பூர்த்தி செய்யப்படுகிறது. வடக்கின் யுத்தத்தின் விளைவு யாதெனில் பெருமபாலன மக்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுநீரக வைத்தியர் என்றவகையில், மினரல் 786 நீரில் அதிகமான கனியப்பொருட்கள் காணப்படுகின்றது. இன்றைய சிறுநீரக நோயாளிகளில் 80மூ வீதமானோர் வடகிழக்கில் உள்ளவர்கள் ஆவர்.
இந்நிலையில் இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்றினால் மக்களுக்கு போக்கிடம் இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்துள்ளார் வைத்தியர் கிறிஸான்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com