களுதாவளை சுயம்புலங்க பிள்ளையார் ஆலயத்தில் ஏகாதச ருத்ர வேள்வி ஆரம்பம்.
மட்டக்களப்பு களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்கப் பிள்ளையார் அருளாசியுடன் கடந்த 19ம் திகதி ஆரம்பமான ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வி எதிர்வரும் 22.11.2018 வியாழக்கிழமை நிறைவுபெறுகின்றது.
அதிகாலையில் ஏகாதச ருத்ர ஜெபத்துடன் சிவபூஜைகள் ஆரம்பமாகி தென்னிந்திய பிரபல கர்நாடக இசைப்பாடகி கானவிநோதினிகலைமாமணி டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் சிவபுராணம் பாடி அனைத்து வரங்களையும் நல்கக்கூடிய ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வியைத் துவக்கி வைக்க பிரமாண்டமான ருத்ர வேள்வி ஆரம்பமாகி தொடர்ந்து சித்தர்களால் பூஜிக்கப்பட்ட மரகதலிங்கத்துக்கு ஏகாதச ருத்ராபிஷேகம் நடைபெற்று 11 வகையான தானங்கள் நடைபெறும்.
மகா யாகத்தின் பிரதம சிவாச்சாரியாராக பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலய பிரதச குரு சிவஸ்ரீ சோமாஸ்கந்தக் குரக்களும், சதுர்வேதபாராயணத்தை மயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் பிரதம குரு சசிவஸ்ரீ டாக்டர் ஸ்ரீனிவாச சசாஸ்திரிகளும் நிகழ்துத்துவதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று 20 செவ்வாய்க்கிழமை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும், சின்மயாமிஷன் சுவாமி பிரம்மச்சாரி சீதாகாசானந்தா அவர்களும் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment