Saturday, February 13, 2016

மஹிந்தவை மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றிவிட்டேன். மார்தட்டுகின்றார் மைத்திரி. வீடியோ

இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள் யாவும் காலாவதியாகியுள்ளதாகவும் மஹிந்த உட்பட இராணுவ வீரர்கள் யாவரையும் மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மைத்திரிபால சிறிசேன.

பொலநறுவை மக்களுக்கு நீர்வழங்கல் பொறிமுறை ஒன்றை ஆரம்பிவைக்கும் நிகழ்வொன்றில் மேற்கண்டவாறு கூறியுள்ள அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்:

கடந்த வாரம் இலங்கைக்கு வந்து சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான ஆணையாளர் என்னுடன் பேசும்போது, நீங்கள் தங்களுடைய ஒரு வருட காலத்தில் மிகவும் நன்றாக செயற்பட்டிருக்கின்றீர்கள். உங்களுடைய அரசு இன்று செயற்படும் விதத்தில் நாங்கள் மிகவும் திருப்தியும் சந்தோஷமும் அடைந்துள்ளோம். உங்களுடைய அரசாங்கத்திற்கு நாங்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கவும் இல்லை அதை செய்யவும் மாட்டோம் என்றும் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி கூறியிருக்கின்றார், நாம் ஐக்கிய நாடுகள் சபை செய்துள்ள முன்மொழிவுகளுடன் சம்மதித்துக்கொண்டமையானது, இந்நாட்டை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயேர்களுடன் நாம் 1815 செய்து கொண்டு ஒப்பந்தத்தைவிட காட்டிக்கொடுப்பானது என. அவர் 1815 ஆண்டின் ஒப்பந்தத்தை வாசித்து பார்த்துத்தான் இவ்வாறு கூறுகின்றாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி நாம் அரசை கைப்பற்ற முன்பு என்ன கூறினார்? மைத்திரி அரசமைத்தால் மஹிந்த ராஜபக்ச உட்பட யுத்தத்தை மேற்கொண்ட இராணுவ வீரர்கள் அனைவரையும் சர்வதேச சமூகம் மின்சார நாற்காலியில் ஏற்றும் என்று கூறினார். மின்சாரா நாற்காலிக்கு கொண்டு செல்கின்றார்கள் , மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்கின்றார்கள் என்று கூக்குரலிட்டார். நான் தெட்டத்தெளிவாக கூறுகின்றேன் ஜனவரி 8ம் திகதிய மாற்றத்துடன் நான் அவர்கள் அனைவரையும் மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றியுள்ளேன்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com