Sunday, November 15, 2015

பாரிஸில் தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகளில் ஒருவனான உமர் இஸ்மாயிலினின் சகோதரன் பொலிஸில் சரண்.

பாரீஸில் உள்ள படாகிளான் தியேட்டரில் தாக்குதல் நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஒருவனான உமர் இஸ்மாயில் முஸ்தபாவின் சகோதரன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

சம்பவ இடத்தில் கிடந்த விரலை வைத்து பொலீசார் உமரை அடையாளம் கண்டுகொண்டுள்ளதுடன் அவனது வீட்டை சோதனையிட்டு தந்தையை மேலதிக விசாரணைக்காக கைது செய்துள்ளனர். இதையடுத்தே அவனது சகோதரன் சரணடைந்துள்ளர்.

உமரின் சகோதரர் பொலிஸாரிடம் கூறுகையில் , உமர் சிறு சிறு குற்றங்கள் செய்து வந்தது எனக்கு தெரியும். ஆனால் அவர் இப்படி ஒரு தாக்குதலை நடத்துவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் பல ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இல்லை. என் தாய்க்கு போன் செய்தேன். அவருக்கும் உமரின் நடவடிக்கைகள் பற்றி எதுவும் தெரியவில்லை எனக் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

உமர் பாரீஸின் புறநகர் பகுதியான கோர்கோரன்னஸில் 1985ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி பிறந்தான். அவன் 2004ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை சிறு சிறு குற்றங்களுக்காக சிக்கியுள்ளான். ஆனால் சிறை தண்டனை விதிக்கப்படவில்லை.

உமர் பாரீஸின் தென்மேற்கில் உள்ள லூஸ் பகுதியில் இருக்கும் மசூதிக்கு தினமும் சென்று வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவர் கடந்த வருடங்களில் சிரியாவுக்கு சென்று வந்துள்ளாரா என்றும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐஎஸ்ஐஎஸ் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.

பாரிஸில் குறைந்தது 127 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத கொலைவெறித்தாக்குதலை தாமே மேற்கொண்டதாக இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

கருணை காருணியமற்ற பதிலடி கிடைக்கும். பிரன்ஞ் அதிபர்

இத்தாக்குதல் இடம்பெற்ற மறு கணமே இது இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எனத் தெரிவித்த பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் இத்தாக்குதலுக்கு கருணை காருணியமின்றி பதிலடி கொடுக்கப்படுமெனவும் பயங்கரவாதிகளுக்கு பிரான்ஸுக்குள்ளேயிருந்தே உதவிகள் கிடைத்துள்ளன என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாரிஸில் ஆறு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில், தற்கொலை குண்டுதாரிகள் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல்தாரிகளில் மூவர் சகோதரர்கள் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மூவரில் ஒருவர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் என பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர். இரண்டாமவர் பெல்ஜியப் பொலிhரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ளவரின் வகுபாகம் யாதென்பது பொலிஸாருக்கு இதுவரை புலனாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாமவர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவராக அன்றில் தப்பியோடியுள்ளவர்களில் ஒருவராக இருக்க முடியுமென சந்கேக்கும் பொலிஸார் அவர் தொடர்பான மேலதிக தகவல்களை பொது மக்களிடமிருந்து பெறும்பொருட்டு இப்புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.



இவரே தாக்குதல் நடாத்தப்பட்ட இடத்திற்கு சற்று அப்பால் கண்டுபிடிக்கப்பட்டதும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதுமான சிறிய ரக கார் ஒன்றை வாடகை நிறுவனத்திடம் பெற்றுக்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

குண்டு வெடிக்கும்போது அல்லாகு அக்பர் முழக்கம்.

6 இடங்களில் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ; 132 பேர் பலியாகியுள்ளதுடன் 352 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் 99 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தாக்குதல்தாரிகள் குண்டுகளை வெடிக்கச் செய்யும்போது அல்லாகு அக்பர் என முழக்கமிட்டதாகவும் சிரியாவில் பிரான்ஸ் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கான தண்டனையே இத்தாகுதல்கள் எனவும் கத்தினார்கள் என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறுகிறார்.

தாக்குதல்தாரி சிரியாவிலிருந்து அகதிகள் போர்வையில் உள்நுழைந்தவர்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் சிரியாவில் இருந்து அகதியாக கிரீஸ் வழியாக ஐரோப்பா வந்துள்ளார். தாக்குதல் நடந்த படாகிளான் தியேட்டர் அருகே கிடந்த தீவிரவாதியின் உடலுக்கு அருகில் சிரியா பாஸ்போர்ட் இருந்தது. இந்நிலையில் அந்த நபரை அடையாளம் காணுமாறு பிரான்ஸ் அதிகாரிகள் கிரீஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். தீவிரவாதி சிரியாவில் இருந்து அகதியாக கிரீஸில் உள்ள லெரோஸ் தீவுக்கு கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி வந்தது தெரிய வந்துள்ளது.

அவர் அகதிகளோடு அகதியாக கிரீஸ் வந்து அங்கிருந்து பாரீஸுக்கு வந்துள்ளார். அவருடன் எத்தனை தீவிரவாதிகள் அகதிகள் என்ற பெயரில் கிரீஸ் வந்தனர் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. மேலும் தீவிரவாதிகள் பயன்படுத்திய 2 கார்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது தவிர தாக்குதல்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

பெல்ஜியத்தில் ஏழு பேர் , ஆறு பேர் பாரிஸில் கைது

தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஏழு பேர் பெல்ஜியம் தலைநகர் ப்ருசெல்ஸில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் நடந்த ஒரு இடத்தில் நின்ற கார் பெல்ஜியம் பதிவு எண் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெல்ஜியம் தலைநகர் ப்ருசெல்ஸின் புறநகர் பகுதியில் போலீசார் சனிக்கிழமை சோதனை நடத்தினர். சோதனையில் பாரீஸ் தாக்குதலுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பிரான்ஸை சேர்ந்தவர்கள். இதற்கிடையே பாரீஸில் இறந்து கிடந்த தீவிரவாதிகள் அருகே இரண்டு பாஸ்போர்டுகள் இருந்தன.
ஒன்று எகிப்து நாட்டு பாஸ்போர்ட் ஆகும். மற்றொன்று சிரியா பாஸ்போர்ட் ஆகும். பெல்ஜியத்தை சேர்ந்த ஏராளமானோர் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காக போராடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல்களில் பலியானவர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் லாங் பீச்சில் உள்ள கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக மாணவர் நொஹேமி கோன்சாலஸ்(23) ஒரு செமஸ்டருக்காக பாரீஸ் வந்துள்ளார். வந்த இடத்தில் அவர் பலியாகியுள்ளார்.


Barack Obama On Attacks In Paris | It Is An Attack On Humanity And Values



PM Netanyahu's Statement after the Terrorist Attacks in Pari


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com