Friday, October 30, 2015

தமிழினியை முன்வைத்துத் தொடங்கும் உரையாடல். -கனக சுதர்சன்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியற்துறை பெண்கள் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த தமிழினி அண்மையில் நோயின் காரணமாக மரணமடைந்து விட்டார். இதனையொட்டித் தமிழ் மற்றும் சிங்களத்தரப்பில் பல வகையான உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இலங்கைக்கு அப்பால் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ்நாட்டிலும் கூட தமிழினியின் மரண நிகழ்வும் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

யுத்தம் முடிவுக்குப் பிறகு நிகழ்ந்திருக்கும் புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவரின் மரணம் அது. புலிகளின் மரணங்களில்

Read more...

Tuesday, October 27, 2015

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர தோள்கொடுத்த மத்தியதர வர்க்க குழுக்கள் அதிருப்தியடைகின்றன. W.A. Sunil

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ’நல்லாட்சிக்கான’ ஐக்கிய தேசிய முன்னணியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக வக்காலத்து வாங்கிய மத்தியதர வர்க்க அமைப்புகள் மற்றும் குழுக்களும், இப்போது அரசாங்கம் சம்பந்தமாக தமது கவலைகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன. பிரமாண்டமான அமைச்சரவையை கொண்ட தேசிய அரசாங்கத்தை அமைத்தமை, அநியாயக்காரர்களுக்கும் இலஞ்ச-ஊழல்காரர்களுக்கும் எதிராக சட்ட நடவடக்கை எடுப்பதில் அரசாங்கம் “தோல்வியடைந்துள்ளமை” தொடர்பாகவே அவர்களது பிரதான

Read more...

Monday, October 26, 2015

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலையாகுமா கர்ணல் கருணாவின் நிலை.

புலிகளின் முன்னாள் கிழக்கு தளபதி கர்ணல் கருணா என்கின்ற முரளிதரன், சிறி லங்கா சுதந்திரக் கட்சியினால் சன்மானமாக வழங்கப்பட்ட உபதலைவர் பதவியைத் தமிழ் மக்களின் நலனுக்காக துறந்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பான தனது அறிவிப்பில் „ தமிழ் மக்களின் தாய்க்கட்சியில் இணைந்து கொள்ளப்போவதாகவும், இனிமேல் சிங்களக் கட்சிகளுடன் இணைந்திருக்கப்போவதில்லை' என்றும்

Read more...

Sunday, October 25, 2015

புலம்பெயர் தமிழர் அங்கிருந்து ஈழம் என ஊழையிடுவதை தவிர்த்து இங்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும். விக்கி

இலங்கையின் இலவசக் கல்வி மூலம் பட்டம் பெற்றபின் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுபவர்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கிருந்து குரல் கொடுப்பதைவிட, இங்கு வந்து அவர்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

யாழ் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியர்கைளப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த வேண்டுகோளை

Read more...

மாவையின் பாராளுமன்ற உரை (22-10-2015) சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்கு ஊக்கமளிப்பது. வி.சிவலிங்கம்

மாவையின் பாராளுமன்ற உரை - கண்டிக்கத்தக்கது. - - பிற்போக்குத்தனமானது. - - சந்தர்ப்பவாத அரசியல் நோக்கம் கொண்டது. - - சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்கு ஊக்கமளிப்பது.

சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் ஜெனீவா தீர்மானம் தொடர்பான விவாதம் இடம்பெற்றிருந்தது. இவ் விவாதத்தின் போது தமிழர் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவரும் தமிழரசுக் கட்சியின் செயலாளருமான மாவை அவர்கள் ஆற்றிய உரை பல சந்தேகங்களை உருவாக்கி உள்ளது. பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பதற்கான முயற்சியில் கட்சியின் தலைமை ஈடுபட்டுள்ள அதேவேளை

Read more...

Saturday, October 24, 2015

ஐ.நா. சபையின் விசாரணை தமிழ்த் தேசியத்தின் ஒரு கானல்நீர்!

இலங்கையின் 1977 ஆவணி இனக் கலவரத்தைத் தொடர்ந்து நாட்டில் அரசுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கத் தொடங்கின. 1978 அக்டோபர் 5ம் நாள் ஐ.நா.சபைக் கூட்டத் தொடரின் போது அனுமதியின்றி உள்ளே நுழைந்து மேடை ஏறிய திரு வைகுந்தவாசன் பின்வருமாறு உரை நிகழ்த்தினார்.

"பேரவைத் தலைவர் அவர்களே! உலகத் தலைவர்களே!! தமிழ் ஈழம் போன்ற ஒடுக்கப்படும் நாடுகளைக் கொண்ட நாடுகள் உலக நாடுகளின் உச்சப் பேரவையான இங்கே எங்கள் இன்னல்களைக் கூறாமல் வேறு எங்கே போய் எடுத்துக் கூறுவது?

Read more...

Friday, October 23, 2015

இறுதிக்கட்டப் போரில் பொதுமக்களின் உயிரிழப்புக்கு பிரதானமாக தமிழீழ விடுதலைப்புலிகளே பொறுப்பு! பரணகம ஆணைக்குழு .

-சமன் இந்திரஜித்-

கடத்தல் மற்றும் காணாமற்போதல் தொடர்பாக விசாரணை நடத்திய மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு என அறியப்படும் விசாரணை ஆணைக்குழுவின், விசாரணை அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டபோது, போரின் இறுதிக்கட்டமான இறுதி 12 மணித்தியாலங்களில் பெரும்பான்மையான தமிழ் பொதுமக்களை எல்.ரீ.ரீ.ஈதான் கொன்றுள்ளதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கை மற்றும் உடலகம ஆணைக்குழு அறிக்கை

Read more...

Thursday, October 22, 2015

தமிழினிக்காய் அழுகிறார்கள்….. ரகு

மனித உயிர் மகத்தானது. மனித உயிரை விட சுதந்திரம் மகத்தானது. என்றவர் தமிழினியின் தலைவர். ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் குடித்து தமிழர்களுக்கு இருந்த சுதந்திரத்தையும் இல்லாமல் பண்ணிவிட்டார்.

மனிதர்களைக் கொன்று மகிழ்ந்தவர்கள் புலிகள். புலிகள் கொன்றபோது மகிழ்ந்தவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள்.

தமிழினி போன்று எத்தனை பெண்களைக் கொன்றிருப்பார்கள் புலிகள்?

செல்வியும், ராஜினியும், மகேஸ்வரியும், ரேலங்கியும் மற்றும் புலிகளால் கொல்லப்பட்ட

Read more...

Tuesday, October 20, 2015

டேவிட் ஐயாவின் மறைக்கபட்ட இருண்ட பக்கங்களில் ஒன்று. பீமன்.

தமிழரின் விடுதலைக்காக, அவர்களின் மேம்பட்ட வாழ்வுக்காக அனலாக கொழுந்துவிட்டெரிந்த எஸ்.ஏ.டேவிட் என்ற அக்கினிப்பிழம்பு இந்தியாவில் தனக்கே அளவான சிறியதொரு அறையில் நுளம்புக்கு எரியும் சுக்குவிறகுக்கட்டைபோன்று கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக புகைந்துகொண்டிருந்து இறுதியாக கிளிநொச்சியில் அணைந்திருக்கின்றது. இறுதிக்கிரிகையும் முடிந்தாயிற்று. பலர் டேவிட் ஐயாவின் புகழ் பேசியிருக்கின்றார்கள். பலர் அவரின் தியாகம், திறமை, வாழ்வியல் என்பன பற்றி எழுதியிருக்கின்றார்கள். ஆனால் அக்கினி பிழம்பு வெறும் புகையாக மாற காரணம் யாது , 3 தசாப்தங்கள் அவர்

Read more...

Sunday, October 18, 2015

அக்னி ஏவுகணையை ஏவுவதற்கு முன்னர், அதை நிறுத்த அப்துல் கலாமுக்கு அதிகாலை 3 மணிக்கு வந்த அவசர போன் அழைப்பு !

அக்னி ஏவுகணையை ஏவுவதற்கு முன்னர், அதை தடுத்து நிறுத்த அதிகாலை 3 மணிக்கு முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை மனிதருமான அப்துல் கலாமுக்கு வந்த அவசர போன் அழைப்பைப் பற்றிய அரிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, அமரர் அப்துல் கலாம் எழுதி விரைவில் வெளியாகவுள்ள ’சவால் முதல் வாய்ப்புவரை: இந்தியாவின் சிறப்பம்சம்’ ("Advantage India: FromChallenge to Opportunity") என்ற நூலில் அவர் ஒரு நிகழ்வை பதிவு செய்துள்ளார்.

அதில் அப்துல் கலாம் தெரிவித்துள்ளதாவது:-

Read more...

கிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோரின் கொலைகளும் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும் .

-மீன்பாடும் தேனாடான் - 
2004ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்ததது. இந்த தேர்தலை எதிர்கொள்ள புலிகளின் சிபார்சின் பெயரில் புலிகளது அறிவுறுத்தலுக்கமையவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது வேட்பாளர்களை தெரிவு செய்து நிறுத்தியிருந்தது. ஆனால் தேர்தலுக்கு முன்பாகவே மார்ச் மாதம் 4ம் திகதி புலிகளுக்குள் கருணாம்மானின் தலைமையில் கிழக்கு பிளவு உருவானது. பிளவுக்கு முன்புவரை மட்டகளப்பு -அம்பாறை மாவட்டங்களின் விசேட தளபதியாக இருந்த கருணாம்மானே புலிகளின் சார்பில் இந்த வேட்பாளர்களை தேர்வு செய்திருந்த படியால்

Read more...

டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா?- நிலாந்தன்

தனது பல தசாப்த கால அலைந்த வாழ்வின் முடிவில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார். ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின் எல்லையோரக் கிராமங்கள் நெடுக மைல் கணக்காக நடந்த கால்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் தமது பயணத்தை முடித்துக் கொண்டன.

ஒரு செயற்பாட்டாளராக, கைதியாக, நாடு கடந்து வாழ்பவராக முதிய வயதிலும் தேடப்படும் ஒருவராக ஆறுதலின்றி சதா அலைந்த ஒரு பெருவாழ்வு கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அதிகம் பேருடைய

Read more...
Page 1 of 127812345678910111278Next
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com