Sunday, February 1, 2015

ராஜபக்சவின் கைக்கூலி குமார் குணரட்ணம் நாடுகடத்தப்படுகின்றான்.

ராஜபக்சவின் சர்வாதிகாரப்போக்கினை ஜேவிபி எதிர்த்ததை தொடர்ந்து தனது அரச பலத்தை பயன்படுத்தி அக்கட்சியை சின்னா பின்னமாக்கும் சதிகளை ராஜபக்ச மேற்கொண்டிருந்தமை யாவரும் அறிந்தது. ஜேவிபி யை பலவீனப்படுத்துமுகமாக முதலில் அக்கட்சியிலிருந்த விமல் வீரவன்சவை உடைத்த ராஜபக்ச தொடர்ந்தும் பலவீனப்படுத்தும் நோக்கில் குமார் குணரட்ணத்தினை பயன்படுத்தினார். ராஜபக்சவின் திட்டமிட்ட நிகழ்சி நிரலில் செயற்படும் ராஜபச்ச-குமாரர் குணரட்டணம் கூட்டு சதி வெளிவராமல் இருக்கும் பொருட்டு குமார் குணரட்ணம் கடத்தப்பட்டதாக நாடகம் ஒன்று அரங்கேறியிருந்ததும் பின்னர் குமார் குணரட்ணம் விடுவிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டிருந்ததும் யாவரும் அறிந்தது.

இலங்கை பிரஜா உரிமை அற்ற ஒருவர் நாட்டினுள் அரசியலில் ஈடுபட முடியாது என நாடுகடத்தப்பட்டிருந்த முன்னணி சோசலிசக் கட்சியின் தலைவர் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் அவுஸ்திரேலிய 'சுத்துமாத்து' குமார் குணரட்ணம் இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிங்கப்பூர் எயார் லைன்ஸுக்கு சொந்தமான SQ 468 விமானம் மூலம் இலங்கைக்கு வந்து சேர்ந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் முன்னணி சோசலிசக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அபேட்சகருக்கு சார்பாக பிரச்சாரம் செய்யவே தான் நாட்டுக்கு வந்துள்ளதாக குமார் குணரட்ணம் தெரிவித்திருந்தார். நாட்டில் அரசியலில் ஈடுபட முடியாது என நாடுகடத்தப்பட்டிருந்த குமார் மஹிந்த ஆட்சியில் உள்ளபோது, அதுவும் மஹிந்த தேர்தலில் வேட்பாளராக நிற்கின்றபோது முன்னிலை சோசலிசக் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தியிருந்தால் அந்த வேட்பாளர் நிட்சயமாக மஹிந்தவிற்கு போட்டியான வேட்பாளரே.

இந்நிலையில் முன்னிலை சோசலிசக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதென்றால் மஹிந்தவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வது என்பது மறுகருத்து. நாட்டில் அரசியல் செய்ய முடியாது என நாடுகடத்தப்பட்டிருந்த குமார் குணரட்ணம் மஹிந்தவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார் என்றால் அதன் பின்னணியை ஆறறிவுள்ள அனைத்து ஜீவராசிகளாலும் உணரமுடியும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி மஹிந்தவிற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கையில் அவர்களின் பிரச்சாரத்திற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு மஹிந்தவிற்கு குமார் குணரட்ணம் ஆதரவு தேடினார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் புதிய அரசாங்கம் குமார் குணரட்ணத்தை நாட்டிலிருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளது.

லங்கா ஈ நியுஸ் இணையத்தளம் குமார் குணரட்ணத்தின் வருகை தொடர்பில் அத்தருணத்தில் இவ்வாறு அம்பலப்படுத்தியிருந்தது.

இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் முன்னணி சோசலிசக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அபேட்சகருக்கு சார்பாக பிரச்சாரம் செய்யவே இவர் வந்துள்ளதாக கூறப்பட்டாலும் உண்மை அதுவல்ல எனத் தெரியவருகிறது. பொது வேட்பாளர் மைத்ரீபால சிரிசேனவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மு. காங்கிரசுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் உண்டு என்று சேறடிப்பு பிரச்சாரம் செய்து மகிந்தவுக்கு சிங்கள மக்கள் இடையே ஆதரவு திரட்டவே கொண்டுவரப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.


முன்னாள் ஜேவிபி யான குமார் குணரட்னம் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை. இவர் இதற்கு முண்னர் இலங்கைக்கு வந்தது உல்லாசப் பயணி விசாவுடன் ஆகும். உல்லாசப் பயணி விசாவில் இருந்துகொண்டு அரசியல் செய்வது குடிவரவு குடியகல்வு சட்டத்தின்படி குற்றமென்பதால் இவர் இலங்கை அரசால் நாடுகடத்தப்பட்டார். இலங்கையில் விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் நின்ற காரனத்தினால் குடிவரவு குடியகல்வு திணைக்களம் இவருக்கு ரூ. 39,695 தண்டம் விதித்தது.

இவர் யார், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏன் வந்தார், ஏன் நாடுகடத்தப்பட்டார் என்பதன் விபரம் பின்வருமாறு.

இவர் ஜேவிபி இயக்கதின் முன்னாள் முக்கிய உறுப்பினராவார். 88, 89 ம் ஆண்டுகளில் இலன்கையில் ஜேவிபி இனரால் நடத்தப்பட்ட படுகொலை அரசியலில் முக்கிய பொறுப்பு வகித்த இவர் இலங்கையில் இருந்து தப்பியோடி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து அவுஸ்திரேலிய பிரஜையானார். ஜேவிபி இல் இருந்த காலத்தில் இவரை அவரது இயக்கத்தில் பலரும் 'குமார மாத்தையா' என்ற பெயரில்தான் அறிந்திருந்தனர். தமிழர்களுக்கு இவரைத் தெரியாது என்றே கூறலாம். இவர் தனது தந்தை தமிழ் என்பதை பெரிதாக வெளிப்படுத்துவதில்லை. இவரது தாயார் சிங்களப் பெண் ஆவார்.

குமார் குணரட்னம் கடந்த இரண்டு வருடங்களின் முன்னர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு ஜேவிபி இயக்கத்தை உடைத்து முண்னனி சோசலிசக் கட்சியை உருவாகினார். பின்னர் அந்தக் கட்சியின் தலைவர் எனக் கூறிக்கொண்டு மேடைகளில் ஜேவிபி க்கு எதிராக பிரச்சாரம் செய்தார். தான் அரசாங்கத்தின் கையாள் இல்லை எனக் காட்டுவதற்காக அந்தக் கட்சிக் கூட்டங்களில் சாடைமாடையாக மகிந்த அரசாங்கத்தையும் விமர்சித்தார். ஆனால் இவரை நம்பி ஜேவிபி யை விட்டு வந்த இளைஞர்கள் இவர் உண்மையிலேயே மகிந்த அரசிற்கு எதிராரனவர் என நம்பி தமது கூட்டங்களில் மகிந்த அரசை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். நிலைமை கட்டுக்கடங்கிப் போவதற்கு முன்னரே கோத்தாபய இவரை நாடுகடத்த வகை செய்தார்.

அவ்வாறு நாடுகடத்தப்பட்டவர் இதுவரை காலமும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை சந்தித்து தான் முன்னணி சோசலிசக் கட்சியின் தலைவர் என்றும் தமிழர்களின் உரிமைக்காக தமது கட்சி போராடும் என்றும் கூறிவந்தார். ஜேவிபி இயக்கத்தின் மிக ஆரம்பகால உறுப்பினரும் தலமைப் பதவியில் மிக முக்கிய இடத்திலும் இருந்த இவர் கடந்த 35 வருடகால தமிழ் மக்கள் மீதான யுத்தத்தின் போது என்ன செய்தார், என்ன கருத்து வகித்தார் என்பதற்கு இவர் எந்த விளக்கமும் இதுவரை சொன்னதில்லை.

இவருக்கு இலங்கைக்கு போகமுடியாத சூழல் இருப்பதாகவே இவரும் இவரது கட்சியும் கடந்த இரு வருடங்களாக வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் கூறிவந்தனர். ஆனால் இப்போது திடீரென எந்த தடையும் இல்லாது இலங்கைக்கு சென்று பகிரங்கமாக அரசியலில் ஈடுபட அரசாங்கம் இவருக்கு இடமளித்துள்ளதன் மர்மம் என்ன என பல அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

அரசியல் காரணங்களுக்காக நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டுப் பிரஜையான ஒருவர் அரசாங்கத்தின் அனுமதியோ உத்தரவோ இன்றி மீண்டும் நாட்டுக்குள் வந்து வெளிப்படையாக அரசியலில் ஈடுபடுவது என்பது இயலாத காரியமாகும். எனவே இவரை அரசாங்கம்தான் கொண்டுவந்துள்ளது என்பது தெளிவு. இதற்காக இவருக்கு அவுஸ்திரேலிய டொலர் 5 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணமானது தற்போது சிங்கபூரில் நிற்கும் பா.உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்தவின் நெருங்கிய ஆலோசகருமான சஜின் வாஸ் குணவர்தனவினால் கைமாற்றப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை இந்த கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்து முடிந்ததுமே இவரது கட்சி உறுபினரான அஜித் குமார என்பவர் கொழும்பு குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கு சென்று இவரது முன்னைய தண்டப் பணமான ரூ. 39, 635 வை செலுத்தியுள்ளார்.

தற்போதும் உல்லாசப் பயண விசாவிலேயே இலங்கை வந்துள்ள இந்த சுத்து மாத்துப் பேர்வழியான குமார் குணரட்ணம் பகிரங்கமாக மேடைகளில் ஏறி அரசியல் செய்வது குடிவரவு குடியல்வு சட்டத்தின்படி குற்றமாகும். அப்படியானால் இவருக்கு அரசாங்கம் அவசர அவசரமாக இலங்கைப் பிரஜா உரிமை வழங்கியிருக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பலர் அதிலும் குறிப்பாக தமிழ்ர்கள் இரட்டைப் பிரஜாஉரிமை கொரியும்கூட அவற்றை வழங்க மறுத்து வரும் மகிந்த அரசாங்கமானது திடீரென்று இந்தப் பேர்வழிக்கு மட்டும் விசேட சலுகை வழங்குவது ஏன் என்பது எந்த முட்டாளுக்கும் புரியும் என்பதில் சந்தேகமில்லை.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com