வடக்கிற்காகவே கிழக்கிலுள்ள மக்கள் யுத்தம் செய்தார்கள்!
கிழக்கிலுள்ள மக்களுக்கு யுத்தம் ஒன்றில் தேவையில்லை எனவும் அவர்கள் தமிழீழத்திற்காக யுத்தம் செய்தது வடக்கிலுள்ள மக்களுக்காகவே எனவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிடுகின்றார்.
யுத்தத்தின் காரணமாக அதற்காக தங்களை ஈடுபடுத்திக் கொண்ட தமிழ் மக்கள் 6,000 இற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் .காட்டினார்.
யுத்தம் தொடர்ந்திருந்திருந்தால் யுத்தத்தில் இறந்திருப்போரின் தொகை அதிகரித்து தமிழ் மக்களின் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி கண்டிருக்கும் எனக்குறிப்பிட்ட பிரதியமைச்சர், தமிழரசுக் கட்சி மீண்டும் அவர்களின் தமிழீழ கனவைக் களைந்து தமிழ் மக்களுக்காக ஏதேனும் உதவுவதற்கு முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment