நாட்டு மக்கள் மூன்று வேளை உணவுக்கும் வழியில்லாமல் இருக்கிறார்கள்...!
நாட்டு மக்களுக்கு மூன்று நேர உணவுக்கும் வழியில்லாமல் ஆட்சியில் மாற்றத்தை வேண்டிநிற்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய குறிப்பிடுகின்றார்.
பசறையில் ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகமொன்றைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வாறு நாட்டை நடாத்திச் செல்வதற்கும், இவ்வாறு நாட்டை வழித்துச் சாப்பிடுவதற்கும் இடமளிக்க முடியாது எனக் கூறும் மக்கள் ஆட்சி மாற்றத்தை வேண்டி நிற்கின்றார்கள். நாட்டு வளங்களை இல்லாதொழித்து மக்களின் பணத்தைச் சூரையாடுவதற்கும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இடமளிக்க முடியாது எனவும் நாட்டு மக்கள் குறிப்பிடுகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment