ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஹெல உறுமய போட்டியிடாது!
ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஜாத்திக்க ஹெல உறுமயவின் வேட்பாளர்கள் எவரும் போட்டியிட மாட்டார்கள் என ஜாத்திக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க நேற்று (31) குறிப்பிட்டார்.
ஜாத்திக்க ஹெல உறுமய மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (30) கூடி இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பிலும் இதுவரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜாத்திக்க ஹெல உறுமயவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடாத்தவில்லை எனவும் வர்ணசிங்க குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment