தென் மாகாண வீதிகளில் சீ.சீ.ரீ.வி கமெராக்கள் பொருத்துவதற்கு தீர்மானம்!
தென் மாகாணத்தில் இன்னும் ஐந்து இடங்களில் சி.சி.ரி.வி. கெமெராக்களை பொருத்துவதற்கு மாகாண போக்குவரத்து அதிகாரி திட்டமிட்டுள்ளார்.
காலி அக்குரஸ்ஸ பாதையின் போகொட சந்தி, மாத்தறை அக்குரஸ்ஸ பாதையின் இஸ்ஸதீன் நகர், காலி பிரதான பஸ் தரிப்பிடம், ஹிக்கடுவ நகர் மற்றும் அம்பலங்கொட நகர் ஆகியன உட்படும் வகையில் இந்த கெமெராக்கள் நிருவப்படவுள்ளன.
இதேவேளை, கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் ஐந்து இடங்களில் ஏற்கனவே இந்த சி.சி.ரி.வி. கெமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மாகாண போக்குவரத்துப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment