பணிபுரிகின்ற சிறந்த தேரர்கள் பத்துப் பேரைத் தேடியெடுக்க முடியாது! - ஞானசார தேரர்
ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்ற போதும், பொறுப்புணர்வோடு செயற்படக்கூடிய பத்து தேரர்களைத் தேடியெடுக்க முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கொஸ்கொட மானிமகொடெல்ல ஸ்ரீபவர போதிராஜ விகாரையில் நடைபெற்ற மங்களோற்சவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு ஞானசாரர் தொடர்ந்து உரையாற்றுகையில் -
“ஊடங்கள் எங்களுக்கு உண்மையைச் சொல்லவிடுவதில்லை. குறித்ததொரு பகுதியினர் தங்கள் பண பலத்தால் இதனை மூடி மறைக்கின்றனர். தேரர்கள் ஆயிரம் பேரைத் தேடினாலும் அவர்களில் சிறந்த முறையில் செயற்படுபவர்கள் பத்துப் பேரைத் தேடியெடுப்பது கடினம். கற்கள், துண்டுகள் வேண்டியளவு இருக்கின்றன. பெறுமதி மிக்க மாணிக்கக் கற்களைத் தேடியெடுப்பது கடினமாக இருக்கின்றது.
அரசியல்வாதிகளும் சில பொலிஸாரும் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பவர்கள் தேர்ர்கள் என நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். 2500 வருட வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க எமது மூதாதையர் கட்டிக்காத்த உரிமைகளை ஐந்து ஆறு வருடங்களுக்கு ஆட்சிபீடத்தில் வந்தமர்ந்த சோற்றுமாடுகளுக்கு இல்லாதொழிக்கச் செய்வதற்கு இடமளிக்க முடியாது. அவர்களுக்குத் தேவை பதவி மட்டுமே” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment