Tuesday, August 12, 2014

ராயப்பு ஜோசப்பை கைது செய்வதற்கு அரசாங்கம் ஏன் பின்னிற்கின்றது? அரசாங்கத்தை சாடுகின்றார் கலகொட ஞானசார தேரர்!

"பாம்பு கடிக்கிறது என கூச்சலிட்டுக் கொண்டிருக்கா மல் அப்பாம்மை அடித்துக் கொல்ல வேண்டும்"-கல கொட அத்தே ஞானசார தேரர்.

நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் தொடர்ந்தும் காட்டிக் கொடுக்கும் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பை கைது செய்வதற்கு அரசாங்கம் ஏன் பின்னிற்கின்றது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வியெழுப்புகின்றார்

இது தொடர்பாக தேரர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் ஆயர் ராயப்பு ஜோசப் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராகவும் எமது படையினருக்கு எதிராகவும் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ந்து கருத்துக்களை ராயப்பு ஜோசப் வெளியிட்டு வருகின்றார்.

மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பின் செயற்பாடுகளை எல்லாம் பார்த்துக்கொண்டு அரசாங்கம் மௌனமாக இருக்கின்றது. இது நாட்டுக்கு உகந்தசெயல் அல்ல எனவும், ராயப்பு ஜோசப் இலங்கையின் அரசியலமைப்பையும் சட்டங்களையும் மீறி செயற்படுவதுடன் இறுதிக் கட்ட யுத்தத்தில் எமது படையினர் கொத்து குண்டுகளை மக்கள் மீது பொழிந்தனர் என்றும் சர்வதேச ரீதியில் பிரசாரத்தை இவரே முன்னெடுத்தார் எனவே அவரை உடனடியாக கைதுசெய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்

பாம்பு கடிக்கிறது என கூச்சலிட்டுக் கொண்டிருக்காமல் அப் பாம்மை அடித்துக் கொல்ல வேண்டும். அதேபோன்று தேசத்துரோக செயலில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் ராயப்பு ஜோசப்பை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்

காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைகள் குழு மீது நம்பிக்கை இல்லையென்றும் எனவே அக் குழுவிற்கு சாட்சியமளிக்க தயாரில்லை என்றும் எனவே அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதாகவும் மன்னாரில் இடம்பெற்ற விசாரணையின் போது ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தமை தொடர்பாக தமது பக்க நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய போதே கலகொட அத்தே ஞானசாரதேரர் இவ்வாறு தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com