விக்னேஸ்வரன் பதவி விலகத் தீர்மானம் என்கிறது “திவயின” சிங்களப் பத்திரிகை!
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் பதவி துறக்கத் திட்டமிட்டுள்ளதாக அரச ஆதரவு சிங்கள பத்திரிகையான “திவயின” செய்தி வெளியிட்டுள்ளது.
விக்னேஸ்வரன் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக வடக்கிலிருந்து தகவல் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
வட மாகாண ஆளுனராக ஜீ.ஏ.சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் அவர் இந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு சிவில் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகின்றபோதிலும், அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது.
வடக்கு அரச நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதாகவும், ஈழ ஆதரவாளர்களின் கோரிக்கைக்கு அமைய தீர்மானம் எடுக்க முடியாது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளதாக குறித்த “திவயின” மேலும் செய்தி வெளியிட்டுள்ளது,
0 comments :
Post a Comment