Sunday, August 3, 2014

அமெரிக்கா புரிந்த மனித உரிமை சித்திரவதைகளை முதன்முறையாக பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார் ஒபாமா!

அமெரிக்கா பகிரங்கமாக ஒப்பக்கொள்ளும் போது அமெரிக்காவை கண்டும், காணாதவர்போல விடுத்து இலங்கையை நவிபிள்ளை குறிவைப்பது ஏன்??

அமெரிக்கா மீது செப்டெம்பர் 11ம் திகதி மேற்கொள்ளப் பட்ட தாக்குதலில் கைது செய்யப்பட்ட பல சந்தேக நபர்கள் தொடர்பாக சி.ஐ.ஏ. உளவு பிரிவு செயற்பட்ட விதம், மனிதாபிமானமற்றது என, பராக் ஒபாமா நேற்றைய தினம் ஏற்றுக்கொண்டார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன் றுக்கு பதிலளிக்கும்போதே, ஒபாமா இவ்வாறு தெரிவித்தார்.

செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பினனர் நாம் பெரும் தவறை புரிந்துள்ளோம் என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம். சரியானதையும் செய்தோம். எனினும் தரக்குறைவான செயற்பாடுகளையும் மேற்கொண்டோம். நாம் பல கொடுமைகளை புரிந்தோம். அதனை ஏன் அவ்வாறு செய்தோம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. மத்திய புலனாய்வு பிரிவின் சகல தரப்பினரும் மிகவும் சிரமத்துடன் பணியாற்றுகின்றனர். கடமைக்காகவே, அவர்கள் பிழையான செயற்பாடுகளை மேற்கொண்டார்கள் என்பது, எனக்கு தெரியும். பயங்கரவாதிகளை போன்று சந்தேக நபர்களும் கொடுமைப்படுத் தப்பட்டனர். விசாரணைகளை மேற்கொள்ளும்போது, நாம் எல்லைமீறி செயற்பட்டுள்ளோம். அதனை தெளிவாக புர்pந்து கொண்டுள்ளோம். அத்துடன் அதனை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். நாடு என்ற வகையில் அதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்வோம்.

இவ்வாறு அமெரிக்க பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஜனாதிபதி ஒபாமா முதல் முறையாக பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். சி.ஐ.ஏ. அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாக, அந்நாட்டு செனட் சபை வெளியிடவுள்ள ஆய்வறிக்கையில் இந்த சித்திரவதைகள் தொடர் பான தகவல்களையும் அம்பலப்படுத்தவுள்ளதனால், அதற்கு முன்னர் ஒபாமா, இதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

ஈராக்கின் அபூ கிரைப் சிறைக்கூடத்திலும், கியூபாவின் குவன்டனாமோ பே சிறைக்கூடம் உட்பட பல இடங்களில் வதைமுகாம்களை நடாத்தி, அமெரிக்கா சந்தேக நபர்களை கொடுமைப்படுத்தும் விதம் தொடர்பாக, கடந்த காலங்களில் காட்சிகளுடன் செய்திகள் வெளியிடப்பட்டன. அதனை கண்டும், காணாதவர்கள் போன்று இருந்த, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, ஒபாமாவின் இம்முறை கூற்றுக்கு மத்தியில் மௌனம் சாதித்து வருகின்றார்.

ஒரு சிறிய நாட்டின் மீது போலியான மனித உரிமை குற்றச்சாட்டுக்களை சுமத்தி, கடும் அழுத்தங்களை பிரயோகிக்கும் அவர், அமெரிக்காவின் உண்மையான சித்திரவதைகள் தொடர்பாக ஒபாமா அம்பலப்படுத்தும்போது, இது குறித்து ஒருவார்த்தையேனும் பேசாமல் மௌனம் சாதிக்கின்றார். இலங்கைக்கு மட்டுமன்றி, மேலும் பல சிறிய இராச்சியங்களுக்கும் அழுத்தம் ஏற்படுத்துவதற்கு, மனித உரிமைகள் என்ற போர்வையில் நவநீதம் பிள்ளையும், அமெரிக்காவும் இணைந்து போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தது. அமெரிக்காவின் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்டறிவதற்கு பிள்ளையினால் முடியாது போயுள்ளது. இதன் மர்மம் என்னவென, புத்தஜீவிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா போன்ற நாடுகளை ஆக்கிரமித்து, மோதல்களை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கானோரை கொன்றுகுவித்து, அந்த நாடுகளை செயலிழக்கச்செய்த அமெரிக்கா, பலஸ்தீனத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்த காஸா யுத்தத்திற்காக இஸ்ரேலுக்கு பல கோடி டொலரை வழங்கி வருகிறது. உலக மனிதர்களின் மனித உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதாக கூறிக்கொள்ளும் அமைப்புகளுக்கும், இந்த பலசாளிகளின் சட்டவிரோத செயற்பாடுகள் காணாமல் இருப்பதற்கான மர்மம் என்னவென, பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com