இராணுவ வீரர் ஒருவர் மாத்தறை பாலத்திலிருந்து ஆற்றில் குதித்தார்…
சரீரத்தைத் தேடி கடற்படையினர்!
விஷ்வமடு பிரதேசத்தில் இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றுகின்ற 27 வயதுடைய இராணுவ வீர்ர் ஒருவர் நேற்று (25) அதிகாலை மாத்தறை மகாநாம பாலத்திலிருந்து நில்வலா கங்கையில் பாய்ந்துள்ளதாக மாத்தறை பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.
ஆற்றில் பாய்ந்த்தன் பின்னர் காணாமல் போயிருப்பவர் தெலிஜ்ஜவில, ஹொரக்கெட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஹொரகலகே பெலவத்தகே சஞ்ஜீவ நிஷாந்த (27) எனும் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
அவர் சென்ற 14 ஆம் திகதி இராணுவத்திலிருந்து விடுகை பெற்று வந்துள்ளதுடன் நாளை (27) மீண்டும் சேவையில் இணையவிருந்த்தாகவும் கூறப்படுகின்றது.
இராணுவ வீர்ருக்குச் சொந்தமானது எனக் கருதப்படுகின்ற பணப்பையும், பாதணிகளும் பொலிஸாருக்குக் கிட்டியுள்ளது. இராணுவ வீர்ர் ஆற்றில் பாய்ந்த்தும் அவரைப் காப்பாற்றுவதற்கும், பாய்ந்த்தன் பின்னர் அவரின் சரீரத்தை எடுப்பதற்கும் பொறுப்புச் சொல்ல வேண்டிய எந்தவொரு நபரும் முன்வராத்தனால், குறித்த இராணுவ வீர்ரின் சொந்தக்கார்ர் ஒருவர் படகொன்றை எடுத்துவந்து சரீரத்தை தேடுவதில் ஈடுபட்டுள்ளார்.
அவர் ஆற்றில் பாய்ந்த இடத்தில் ஒரு பாரிய முதலையும் இருந்த்தை பெரும்பாலானோர் கண்டுள்ளனர்.
தற்போது நீரில் காணாமல் போயுள்ள இராணுவ வீர்ரின் சரீரத்தைத் தேடுவதற்காக மாத்தறைப் பொலிஸார் கடற்படையினரின் உதவியைக் கோரியுள்ளனர்.
மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment