ரயில் சாரதிகளின் சாதுரியத்தால் பாரிய அனர்த்தம் தவிர்ப்பு :ஒரே தண்டவாளத்தில் பயணித்த திருமலை - கொழும்பு ரயில்கள்!
கொழும்பிலிருந்து திருகோணமலைக்கும் பயணித்த ரயில் வண்டியொன்றும் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கு கொண்டிருந்த ரயில் வண்டியொன்றும் கல்லோயா மற்றும் கந்தளாய் புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் ஒரே ரயில் பாதையில் பயணித் துள்ளதாக அநுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டறை உத்தியோஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
நேருக்குநேர் ஒரே பாதையில் பயணித்த இந்த ரயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு ஒரு ரயில் கல்லோயா புகையிரத நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டு மீண்டும் ரயில் போக்குவரத்தை சீர் செய்ததாக அவர் தெரிவித்தார். இதன்போது எந்தவொரு விபத்துக்களோ சேதங்களோ ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். தொடர்பாடலில் ஏற்பட்ட சிறு பிரச்சினையினாலேயே இரு ரயில்கள் ஒரே பாதையில் நேருக்கு நேர் பயணித்ததாகவும் உரியநேரத்தில் அதனை இனங்கண்டு சீர்செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை உடனடி கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்திருக்காவிடின் ரயில்கள் இரண்டும் பாரிய விபத்துக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். அநுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டறைக்கு உரிய பிரதேசத்திலேயே இந்தத சம்பவம் இடம் பெற்றுள்ளது. தற்போது அந்தப்பிரதேசத்தில் ரயில் போக்குவரத்து வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுத்து வரு கின்றனர்.
0 comments :
Post a Comment