கள்ளச்சாராயம் பிடிக்கச்சென்ற பொலிஸாரின் ஜீப் தீக்கிரை! பொலிஸார் மூவர் உட்பட 10 பேர் படுகாயம்!–மட்டு. பனையறுப்பானில் சம்பவம்!
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் சட்டவி ரோத மதுபான விற்பனை நிலையமொன்றை சுற்றிவளை த்த பொலிஸாருக்கும் அங்கிருந்த மக்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டதுடன், இதன்போது பொலிஸார் சென்ற ஜீப் வாகனமும் பொதுமக்களால் தீயிட்டு கொழுத் தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவத்தில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத் தினை சேர்ந்த வசந்த வீரசிங்க, அஜித்குமார ஜயவிக்ரம ஆகியோர் காயமடைந்துள்ளதுடன், பனையறுப்பானை சேர்ந்த 50 வயதுடைய ஆறுமுகம் வள்ளியம்மை என்னும் பெண் துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளதாகவும் படுகாணமடைந்த 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருதாவது,
நேற்று இரவு மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான் பிரதேசத்தில் சட்ட விரோத மதுபானம் விற்பனை செய்வோரை கைதுசெய்யும் நோக்கில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர். அவ் வேளை பொலிஸாருக்கும பொதுமக்களுக்கும் இவ்வாறு மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொலிஸாருக்கும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் ஜீப் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதோடு, எட்டுப் பேர் சென்ற பொலிஸ் அணியில் மூவர் கிராமவாசிகளால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து ள்ளதுடன் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இந்த அமைதியின்மை ஏற்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு அங்கு கூடியிருந்தவர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் இதனையடுத்து பெண் பொலிஸ் கான்ஸ்ரபிள் உள்ளிட்ட மற்றுமொரு குழுவொன்றும் கெப் வாகனத்தில் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் இதன்போது பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி கெப் வாகனத்திற்கு தீ வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment