கலபொடஅத்த ஞானசார தேரரிடம் 100 கோடி ரூபா நஸ்டஈடு கோரி வழக்கு தொடர போகின்றாராம் ராஜித
கலபொடஅத்த ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் பூஜித கலபொடஅத்த ஞானசார தேரரினால் தமக்கு தினம் தினம் மேற்கொள்ளப்படும் சோதனைகளின் காரணமாக 100 கோடி நஸ்டஈடு கோரி வழக்கு தொடரப் போவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பணத்தை வக்கீல் கட்டணத்திற்கும், தேசிய மீனவ சம்மேளனத்திற்கும் வழங்கப் போவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தான் இன்று முற்பகல் ஜனாதிபதியை சந்தித்த வேளை இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment