Thursday, July 10, 2014

உலகத்தின் கவனம் கால்பந்தாட்டத்தில் திரும்பியிருந்த சமயம் காஸாவில் நிகழ்ந்த துர்ப்பாக்கிய சம்பவம்! (Video)

தாக்குதல் தொடரும் என்கின்றார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்!

உலகத்தின் கவனம் பிரேஸில் மற்றும் ஜேர்மனி அணிக ளுக்கிடையே நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின் வசம் திரும்பியிருந்த சமயத்தில் காஸாவிற்கு சோகமான இரவாக அமைந்தது. பலஸ்தீன இராணுவத்தினரால் நேற்றிரவு இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதில ளிக்கும் வகையிலேயே இந்த ஏவுகணை தாக்குதல்கள் பலஸ்தீனத்தால் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 25 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹமாஸிற்கு எதிரான தமது இராணுவ நடவடிக்கையினை மேலும் விஸ்தரிக்கப் போவதாகவும், காஸாவிலுள்ள தீவிரவாத குழுக்களை ஒடுக்குவதே தமது இலக்கு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ எச்சரித்துள்ளார். காஸாப் பகுதியிலுள்ள ஹமாஸ் இயக்கத்தின் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது மேலதிக தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யா{ஹ தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பாதுகாப்பு சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பெஞ்ஜமின் நெட்டன்யா{ஹ இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

தமது நாட்டின் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களுக்கு பலஸ்தீன் ஆயுததாரிகள் பாரிய விலை கொடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹமாஸ் இயக்கம் நாட்டின் பல்வேறு நகரங்களை இலக்கு வைத்து 72 ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

காஸா மீது இரவு முழுவதும் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களை அடுத்து ஹமாஸ் இயக்கம் இந்த ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் சுமார் 40 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அனைத்து இஸ்ரேலியர்களையும் தாம் இலக்கு வைத்துள்ளதாக ஹமாஸ் இயக்கம் எச்சரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com