கோத்தபாயவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போகிறதாம் அமெரிக்கா!
அமெரிக்காவினால் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
போர்க் காலப் பிரிவில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷ பதில் சொல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டு, அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமெரிக்கர் ஒருவர் வெகுவிரைவில் அமெரிக்க காங்கிரஸில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றது.
நிவ்யோக் சட்டக் கல்லூரியின் பேராசிரியர் Ryan Goodman இனால் அந்த அறிக்கை முன்வைக்கப்படவுள்ளதுடன், அதன் மூலம் ஸ்ரீலங்கா அரசாங்கமும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதால் இலங்கை தொடர்பில் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment