Thursday, July 3, 2014

வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் சக உறுப்பினர்கள் ஐவரிடம் தலா ஐம்பது லட்சம் கோருகின்றார்.

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பிரச்சினைகளை ஏற்படு;ததி வருவது மட்டுமல்லாது, தொடர்ந்தும் தனது கௌரவத்திற்கும், நேர்மைத் தன்மைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக ஊழல், இலஞ்சம், நிர்வாகச் சீர்கேடு என பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சக உறுப்பினர்களான திரு.எஸ்.எக்ஸ்.குலநாயகம், உப தலைவர் கந்தசாமி சதீஸ், உறுப்பினர்களான கோணலிங்கம் கருணானந்தராஜா, கனகராஜா ஜெயராஜா, சக்திவேல் பிரதீபன் ஆகியோர் ஊடகங்களுக்குத் தெரிவித்து வருவதாகவும் இதனால் தனக்கு ஏறு;பட்டுள்ள அபகீர்த்திக்கு நஷ்ட ஈடாக இவர்கள் ஒவ்வொருவரிடம் தலா 50 லட்சம் கோரியுள்ளாளர் பிரதேச சபைத்தலைவர் அனந்தராஜா.

இது தொடர்பாக அவர் தனது சட்டத்தரணி ஊடாக குறித்த நபர்களுக்கு 27.06.2014 அன்று கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.(டுநவவநச ழக னுநஅயனெ). கடிதம் அனுப்பிய நாளில் இருந்து 21 நாட்களுக்குள் சரியான பதில் வழகங்கப்படாவிடத்து இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கு எது நிலை உருவாகின்றது.

இந்நிலையில் திரு.சூ.சே.குலநாயகம் தலைமையிலான குழுவினர் தமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய்ப்பட்டுவிட்டதாக அவசர அவசரமாக ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியிருக்கி;னறனர்.

மேற்படி நபர்களுக்கு தனித்தனியாக திரு அனந்தராசாவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.


27.06.2014
Mr.S.X.Kulanayagam
No.30,Martin Road,
Jaffnaஐயா,

வல்வெட்டித்துறை நகரசபை பிதா நடராஜா அனந்தராஜ் அவர்கள் மீது, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அவது{று சம்ப்நதமாக


எனது கட்சிக் காரரான வல்வெட்டி;ததுறை,தெணியம்பை வீதியைச் சேர்ந்த வல்வெட்டித்துறை நகராட்டசி மன்றத் தலைவர் நடராஜா அனந்தராஜின் அறிவுறுத்தலுக்கு அமைய தங்களுக்கு அறியத் தருவதாவது, எனது கட்சிக்காரர் சிறப்புப் பட்டதாரி என்பதுடன் முதுமாணி பட்டமும் பெற்றவராவர். ஆவர் ஆசிரியர், அதிபர் போன்ற சேவைகளில் பல ஆண்டுகள் கடமையாற்றியவராவர். கல்வி நிர்வாக சேவையில் பல விடய பரப்புகளில் பணிப்பாளர் தரத்தில் சேவையாற்றியுள்ளார். ககல்வித்துறையில், ஒரு நிபுணத்துவ ஆலோசகராகரும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் கரிசனையும், அக்கறையும் கொண்டு தொடர்ந்தும் சேவையாற்றி வருகின்றார்.

கல்வித்துறை சார்ந்த பல விடயங்களில் பல வெளிநாடுகளில் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றுள்ளார். எனது கட்சிக்காரர் ஓர் எழுத்தாளருமாவர். இவர் கல்வி, நிர்வாகம், முகாமைத்துவம், இலக்கியம், சமூக, அரசியல் தொடர்பான பல நுால்களை எழுதியுள்ளார். இவற்றில் பல நுால்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விருதுகள் பல பெற்றுள்ளன. இந்நுால்களில் பல ஒன்றுக்கு மேற்பட்ட பதிப்புக்களாக வெளிவந்துள்ளன..

எனது கட்சிக்காரர் தொடர்ச்சியாக பல தரப்பட்ட விடயங்களில் கட்டுரைகளை தற்போதும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் எழுதி வருகின்றார். தமிழ் மக்களின் அவலங்களை பல நூல்களிலும் கட்டுரைகளிலும் வெளிக்கொண்டு வந்திருக்கின்றார். எனது கட்சிக்காரர் பல வானொலிகள் , தொலைக்காட்சிகளில் கல்வி, முகாமைத்துவம் போன்ற பல விடயங்கள் தொடர்பில் நேர்காணல்களை வழங்கியுள்ளார். எனது கட்சிக்காரர் ஒரு மேடை நாடக நடிகருமாவர். மேடை நாடகங்களில் நடித்து பல பாராட்டுக்களும், புகழும் பெற்ற ஒருவருமாவர்.

இலங்கையில் வல்வெட்டித்துறையிலிருந்து புகழ்பெற்ற பிரபலமானவர்களில் இவரும் ஒருவராவர். எனது கட்சிக்காரர் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்தேசிய்க கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றதன் மூலமாக தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

எனது கட்சிக்காரர் நேர்மையான ஒருவராவர் என்பதுடன் சமூகத்தின் அனைத்து மட்டங்களில் உள்ள மக்களிடத்தில் நன்மதிப்பைப் பெற்றவர் என்பதுடன் அனைத்து துறை சார் நிபுணர்களிடமும் நன்மதிப்புப் பெற்ற ஒருவராவர்.

நீரும், கந்தசாமி சதீஸ், கோணலிங்கம் கருணானந்தராஜா, கனகராஜா ஜெயராஜா, சக்திவேல் பிரதீபன் என்பவர்களும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் கையூட்டுப் பெற்றுள்ளதாகவும்', 'அண்மையில் வல்வெட்டித்துறைக்கு வழங்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்படாத ஊழியர்களின் தெரிவில் இலஞ்சப் பணம் பெறப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன' போன்ற பொய்யானதும், பிழையானதும், புரட்டானதுமான கூற்றுக்களை வேண்டுமென்றே கபடமான நோக்கங்களுடன் நகரசபையில் முன்வைத்ததுடன் அவற்றை வீரகேசரி, உதயன் பத்திரிகைகளுக்கும் தெரிவித்துள்ளீர். இதனை பத்திரிகைகள் 22.4.2014 ம் ஆண்டு பிரசுரித்திருந்தன.

எனது கட்சிக்காரர் உம்மாலும், மேலே பெயர் குறிப்பிடப்பட்ட ஏனையோராலும், தெரிவிக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களை மறுக்கின்றார். எனது கட்சிக்காரர் அவ்வாறான செயற்பாடுகளில் எக்காலத்திலும் ஈடுபட்டவரல்ல. உங்களால் சுமத்தப்பட்ட பொய்யானதும், புரட்டானதுமான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்த அதிகாரிகள் அவற்றில் உண்மை எதுவுமில்லை என்பதை அறிக்கை செய்துள்ளனர். இதனை நீரும், கந்தசாமி சதீஸ், கோணலிங்கம் கருணானந்தராஜா, கனகராஜா ஜெயராஜா, சக்திவேல் பிரதீபன் என்பவர்களும் நன்கு அறிவீர்கள் அவ்வாறு தெரிந்து கொண்டும் எனது கட்சிக்காரருக்கு அபகீர்த்தியும், அவமானமும் ஏற்படுத்துமுகமாக நீரும் ஏனைய மேலே பெயர் குறிப்பிட்டவர்களும் தொடர்ந்து செயற்பாடுகளை முன்னெடுக்கின்றீர்கள்.
வல்வெட்டித்துறை நகர சபையில் எனது கட்சிக்காரர் வகிக்கும் தலைவர் பதவியை உங்களில் ஒருவருக்குத் தரமறுத்ததன் விளைவாகவே நீங்கள் இவ்வாறான அவதூறானதும், பொய்யானதுமான கூற்றுக்களை எனது கட்சிக்காரருக்கு எதிராக செய்து வருகின்றீர்கள் என எனது கட்சிக்காரர் கூறுகின்றார்.

நீரும், கந்தசாமி சதீஸ்,கோணலிங்கம் கருணானந்தராஜா,கனகராஜா ஜெயராஜா,சக்திவேல் பிரதீபன் ஆகியோருடன் சேர்ந்து 2014.6.10 ம் திகதியன்று தினக்குரல் பத்திரிகையில் சபையின் தலைவர் ' சபையின் தலைவர் தொடர்ச்சயாக பல ஊழல்களில் ஈடுபடுவதுடன் சபையை எதேச்சாதிகாரமாக நடத்தி வருவதாகவும் ' தெரிவித்திருப்பதாக அப்பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. இக்கூற்றானது பொய்யானதும் எனது கட்சிக்காரரை அவமானத்துக் குள்ளாக்கும் ஓர் கூற்றாகும்.

எனது கட்சிக்காரருக்கு எதிராக நீர் பொய்யானதும், கவனயீனமானதும் தீய நோக்கத்துடன் மறைமுகமான நோக்கங்களுக்காக வேண்டுமென்றே முறையற்ற விதத்திலும் பொய்யாகவும், தவறானதும் பிழையானதுமான கூற்றுக்களை எனது கட்சிக்காரரை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் பல்வேறு தரப்பட்ட ஆட்கட்கு தெரிவிக்கின்றீர் என எனது கட்சிக்காரர் கூறுகின்றார்.

உங்களுடைய மேற்படி அவதூறு விளைவிக்கும் கூற்றுக்களால், எனது கட்சிக்காரருக்கு சமூகத்தில் அவமதிப்பும், அபகீர்த்தியும் நற்பெயருக்குக் களங்கமும் ஏற்பட்டுள்ளது. நேர்மையான அரசியல் வாதியும், சமுக சேவகனும், கல்விமானும், கலைஞனும் ஆகிய எனத கட்சிக்காரருக்கு உமது மேற்படி செயல்கள் பெரும் அவமானத்தையும், அபகீர்திதயையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அவர் தனக்கு ரூபா ஐம்பது இலட்சம் ( ரூபா 5,000,000ஃ-) மான நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை உம்மிடம் கோருமாறும் எனக்கு அறிவுறுத்தயுள்ளார்.

அதன் பிரகாரம், எனது கட்சிக்காரருக்கு, இன்றிலிருந்து இருபத்தியொரு (21) நாட்களுக்குள் ஐம்பது இலட்சம் (ரூபா 5,000,000ஃ-) ரூபாவை செலுத்துமாறு இத்தால் இத்தால் நான் உம்மைக் கோருகின்றேன்.

இன்றிலிருந்து இருபத்தியொரு (21) நாட்களுக்குள் மேற்படி ஐம்பது இலட்சம் (ரூபா 5,000,000ஃ-) ரூபாவை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேற்படி தொகையை உம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எனது கட்சிக்காரர் எனக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

ஆகவே மேற்படி தொகையை குறித்த இருபத்தியொரு (21) நாட்களுக்குள் செலுத்தத் தவறும் பட்சத்தில் வேறு எந்த அறிவித்தலுமின்றி வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்பதனை இத்தால் அறியத் தருகின்றேன்

வீ.எஸ். நிரஞ்சன் ( ஒப்பம்)
சட்டத்தரணி
பதவி முத்திரை


2 comments :

கரன் ,  July 3, 2014 at 12:28 PM  

தமி்ழ் மக்கள் ஏக பிரதிநிதிகள் இந்த மாதிரி பதவிக்கு அடிபட்டால். மக்களின் தேவைகளை பார்பதற்கு இவர்களுக்கு நேரம் காலம் இருக்கின்றதா?

இவர்களை தமிழ் மக்குகள் தெரிவு செய்வதன் நோக்கம் என்ன!

தங்களுக்குள்ளேயே ஒன்று படாத இவர்களால் மக்களின் தேவைகளுக்காக ஒன்றுபட முடியுமா?

Anonymous ,  July 3, 2014 at 5:28 PM  

தமிழ், தமிழர் என்று வீர வசனம் பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி சுயநல அரசியல் நடத்தும் துரோகிகளை தெரிவு செய்த ஒவ்வொரு தமிழனும் கோவணத்தை கட்டிக்கொண்டு நடுத்தெருவுக்கு போகும் நிலைமையை எதிர்பார்க்க வேண்டும். அதுவே எங்களுக்கு 50 வருடகால வலராற்று அனுபவங்கள், படிப்பினைகள் என்பதை ஏன் இன்னும் உணரவில்லை எம் இனம்.
இவங்களை தெரிவு செய்வதிலும் பார்க்க சிங்களவர், முஸ்லீம்கள் எவரையாவது தெரிவு செய்திருந்தால் மக்களுக்கு, மண்ணுக்கு ஏதாவது இயன்றளவு நன்மைகள் நிட்சயம் கிடைத்திருக்கும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com