நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கெதிராக ஒன்றிணைந்து…! (படங்கள் இணைப்பு)
“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஏன் ஒழிக்க வேண்டும்” என்ற தொனிப்பொருளில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஒன்றுகூடலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சிரித்துப் பேசியிருந்தனர்.
இந்த ஒன்றுகூடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேக்கா, முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய, ஜாத்திக ஹெல உறுமயவின் உத தலைவரும் மேல் மாகாண சபையின் உறுப்பினருமான உதய கம்மன்பில ஆகியோர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
அதற்கடுத்த வரிசையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக்க அபேசிங்க, பாலித்த ராங்கே பண்டார, நவ சிங்கள உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர, மேல் மாகாண சபை உறுப்பினர் ஹர்சன ராஜகருணா ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
இவ்வொன்றுகூடலை மாதுலுவாவே சோபித்த தேரர் தலைமை வகிக்கின்ற சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.
(கேஎப்)
0 comments :
Post a Comment