Thursday, July 31, 2014

ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் ஜனாதிபதியை தடுத்தனர்!

நிகழ்வுகளைப் பகிஷ்கரிக்கும் நோக்கம் அரசாங்கத் துக்கு இல்லை!

பாதுகாப்பு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடை பெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டி நிகழ் வுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்குபற்ற மாட்டார் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகலவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது;

ஒரு நாட்டுத் தலைவருக்குரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனத்தெரிவித்து ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அங்கு செல்லவேண்டாம் என ஜனாதியின் பாதுகாப்பு பிரிவினர் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளைப் பகிஷ்கரிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. அவர்கள் வழங்கக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் போதிய திருப்பதி இல்லாத காரணத்தினாலும் வேறு பல காரணங்களினாலும் ஜனாதிபதி பொதுநலவாய விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் கலந்துகொள்ள மாட்டார் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (31) பிற்பகல் அமைச்சில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

1 comments :

arya ,  August 1, 2014 at 2:24 AM  

இதை சொல்ல வெக்கமா இல்லை ? இந்த புலன் பெயர் கூட்டத்தை அழித்து கட்டு பாட்டுக்குள் கொண்டு வருது ஒன்றும் பெரிய வேலை இல்லை, புலிகளின் பாணியிலேயே இதை செய்ய முடியும் அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தால் எல்லாம் கட்டுக்குள் வரும். ஆனால் இலங்கை அரசு முன்னாள் புலிகளை ஆலோசகர்களாக வைத்திருக்குக் பொது , அவர்கள் எப்படி தங்கள் சகாக்களை அழிக்க முன் வருவார்கள் ?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com