பெண்கள் மலசலகூடத்தில் வீடியோ பொருத்திய வைத்தியர்! மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு!
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண்கள் மலசலகூடத்தில் வீடியோ கமரா பொருத்திய குற்றச் சாட்டில் கைது செய்ய ப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியரை மீண்டும் நீதின்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அநுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 2 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment