இளம் ஆசிரியையை கூட்டுக் கற்பழிப்புச் செய்த மாணவர்கள் மூவர் கைது!
இளம் ஆசிரியை ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டார் என்ற விடயம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய மாணவர்கள் மூவரையும் இந்திய உத்தரப் பிரதேச பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த ஆசிரியை பிரத்தியேக வகுப்பு நடாத்திவிட்டு மாலை நேரம் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, சந்தேக நபரான ஒரு மாணவன் குறித்த ஆசிரியைக் வழிமறித்து அவரின் முகத்தை மறைத்து பாழடைந்த வீடொன்று எடுத்துச் சென்றுள்ளான் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் அந்த மாணவன், தனது இரு நண்பர்களை குறித்த இடத்திற்கு வருமாறு தொலைபேசியில் அழைத்து அங்கு வரவழைத்துள்ளான்.
அங்கு சந்தேக நபரான மாணவன் ஆசிரியை கற்பழித்ததை ஏனைய மாணவர்கள் இருவரும் தங்களது கையடக்கத்த தொலைபேசி மூலம் படம் பிடித்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.
அங்கு நடந்த எந்தவொரு விடயத்தையும் யாரிடமும் சொல்லக் கூடாது என ஆசிரியை அச்சுறுத்தியதாக அவ்வாசிரியை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த கற்பழிப்புச் சம்பவம் நடைபெறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னரும் இப்பிரதேசத்தில் இவ்வாறான நிகழ்வொன்று நடைபெற்றுள்ளதென்பது தெரியவருகின்றது. அங்கு 20 வயது யுவதியொருவர் 8 பேரால் கூட்டுக் கற்பழிப்புச் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் அன்று அவரும் படம் பிடிக்கப்பட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment