Wednesday, July 2, 2014

நான் அரசியலிலிருந்து ஒதுங்குவேன்! - மர்வின்

“ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எனக்கு அமைச்சர் பதவியொன்று தந்திருக்கின்றார். பதவியினால் மட்டும் பயனில்லை. மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சுதந்திரம் இல்லாவிட்டால் கட்சியிலிருந்தும், அரசியலிலிருந்தும் விலகிச் செல்வேன்” என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மர்வின் சில்வா குறிப்பிடுகிறார்.

களனி வராகொட பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளையொன்றை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

வராகொட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான ரஞ்சித் சமரசிங்கவினால் இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -

“சென்ற தேர்தலின்போது மாகாண சபை உறுப்பினர் ரெஹணசிரி வராகொட தோல்வியைத் தழுவியதற்கான காரணம் எங்கள் இரு சாராரினதும் பிழையினாலேயே. அதற்காக நான் ரெஹணசிரி வராகொடவிடம் மன்னிப்புக் கோருகிறேன். களனி அமைப்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருவரே போதும். வேறெந்தவொரு கட்சியிலிருந்தும் ஒருவர் தேவையில்லை.” எனவும் தெரிவித்தார்.

(கேஎப்)

1 comments :

ROHAN THAMPAPILLAI July 3, 2014 at 2:24 AM  

If Mervy does such a thing it will be great.There are other to roudies too.Better they too leave politics

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com