பௌத்த மதகுருமாரின் பணி பௌத்தத்தைக் காப்பதே ஒழிய எதிர்ப்புக்கள் வெளிக்காட்டுவதல்ல….!
பௌத்த மதகுருமார்களின் பணி பௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தவிர போராட்டங்கள் நடாத்துவதும், எதிர்ப்புத் தெரிவிப்பதும் அல்ல என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவிக்கிறார்.
கண்டி விகாரையொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அமைச்சர், இந்நாட்டு பௌத்த தேரர்களின் செயற்பாடுகள் தொடர்பில் உலகமே இன்று பெரும் விழிப்போடு இருக்கின்றது என்று குறிப்பிட்டார்.
எதுஎவ்வாறாயினும், கிராமப் புற விகாரைகளில் இருக்கின்ற பௌத்த மதகுருமார் தங்கள் பணியைச் சரிவர நிறைவேற்றி வருகின்றனர் எனக் குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் உலகிலுள்ள பல பௌத்த மதம் நின்று நிலவிய நாடுகள் பிற்காலத்தில் காணாமற்போவதற்குக் காரணம் பௌத்த மதகுருமார்களும், பௌத்த மதத்தைப் பின்பற்றுவோர் தங்கள் கடமையைச் சரிவர நிறைவேற்றாமையினாலேயே என்று தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment