Wednesday, July 2, 2014

பெண்ணின் காதை பிய்த்த திருடர்களால் பரபரப்பு... (படம்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணையடி கிரா மத்தில் நேற்று திங்கள் இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்றில் காதணிகளை இழந்த குடும்பப் பெண்ணொருவர் தனது இரு காதுகளிலும் காயம் ஏற்பட்ட நிலையில் வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நாகதம்பிரான் கோயில் வீதி, கிண்ணையடியைச் சேர்ந்த பிள்ளையான் செல்வி வயது (39) என்ற பெண்ணே, இவ்வாறு பாதிப்பிற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவ தினமன்று இரவு வம்மியடி வீதி கிண்ணையடியில் வசிக்கும் தனது மகளின் வீட்டிற்கு சென்று வாசலில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் வளவிற்குள் வந்த சிலர் தன்னையும் கணவரையும் கையில் வைத்திருந்த பொல்லால் தாக்கியுள்ளதாகவும் பின்பு வீட்டிற்குள் புகுந்து பொருட்களை களவாட முயற்சித்ததாகவும் பின்னர் தன்னிடமிருந்த காதணியை கழற்றி தருமாறு அச்சமூட்டியதாகவும் அவற்றினை தரமறுக்கவே காதோடு சேர்த்து காதணிகளை இழுத்து பிய்த்துச் சென்றதாகவும்.

இதனால் எனது காதில் காயமேற்பட்டுள்ளது என்று சம்பவத்தில் பாதிப்புற்று சிகிச்சை பெற்று வரும் பெண் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com