நாட்டைக் காக்கும் நீலக் காவலரண் நிகழ்ச்சியில் அம்பாறைப் பெண்கள் பங்கேற்பு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் “நாட்டைக் காக்கும் நீலக் காவலரண்” தாய்நாட்டைப் பாதுகாப்போம் எனும் தலைப்பில் கருத்தரங்கொன்று அம்பாறை கிழக்குத் தொகுதியிலுள்ள பெண்களுக்காக அம்பாறை நகர சபை மண்டபத்தில் நடந்தேறியது.
தொகுதிகளின் அமைப்பாளர், உணவு பாதுகாப்பு தொடர்பிலான சிரேட்ட அமைச்சர் பீ. தயாரத்னவின் தலைமையின் கீழ் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிராம மட்டத்தில் அரசியல் பிரவேசமுள்ள பெண்களை இணைத்துக்கொண்டு இந்த பெண்கள் பிரிவு இந்நாட்களில் நாடெங்கிலும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில், தென்மாகாண ஆளுநர் உட்பட, கிழக்கு மாகாண சபையின் கல்வியமைச்சர் விமலவீர திசாநாயக்க, வடமேல் மாகாண சபையின் தலைவி இந்ரா தசநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கைச் சம்மேளனத்தின் உப செயலாளர் அருந்ததி ஜெயதிலக்க, மகரகம மாநகர சபையின் தலைவி காந்தி கொடிக்கார, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ.டீ. வீரசிங்க, இராணுவச் சேவை அதிகார சபையின் பிரதித் தலைவி நந்தா இந்திரவங்ச, தலைவர் ரொஷான் பெட்டதுவகே, அம்பாறை நகர சபையின் தலைவர் இந்திக்க நலீன் ஜெயவிக்கிரம ஆகியோரும் பிரதேச சபைகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment