கிழக்கின் சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர் யுவதிகள் இராணுவத்திற்கு…
கிழக்கிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் இலங்கை இராணுவத்தின் பொதுச் சேவைகள் பிரிவுக்கு கந்தகடுபாமில் நேற்று முன்தினம் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொழில்வாய்ப்பின்றியிருக்கும் 426 பேர் படையணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கணனி இயக்குநர்கள், தச்சர்கள் போன்ற துறைகளுக்கு 133 பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கு குறித்த துறைகளில் பயிற்சியுமளிக்கப்படவுள்ளது.
இதில் முதல் கட்டமாக தமிழ் யுவதிகள் 111 பேர் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment