முல்லைத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு !!
முல்லைத்தீவு புதுகுடியிருப்பு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புதுகுடி யிருப்பு மந்துவில் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையல் அறைக்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 35 வயதான குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவி த்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுகுடி யிருப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment