Thursday, June 26, 2014

நாட்டை தாரைவார்க்கும் பெரும் பாவத்தில் ஐ.தே.க கை வைத்துள்ளது!!

ரணிலும், மக்களவும், ரவியும், லக்ஸ்மனும் இப்படி விசத்தை கக்குகின்றார்கள்!!

கொடிய பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டுக்கு உண்மை யான சுதந்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு வீரமிகு படை யினரின் அர்ப்பணிப்பை ஒரு போதும் எவராலும் மறக்க முடியாது. அவ்வாறான வீரமிகு படையினரை தாரை வார்க்கும் பெரும் பாவத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீர கை வைத்துள்ளார்.

இது நேரடியாக புலிப்பயங்கரவாதிகளுக்கு கரம் கொடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் தேவையை நிறைவேற்றும் ஒரு செயலாகும். மிக கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வீரமிகு படையினருக்கு மட்டிட முடியாத பலத்தை வழங்கியவர்கள் அதற்கு பின்னால் இருந்து உயிர் தியாகத்துடன் போராடிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் என்பதை மறந்து விட முடியாது.

நாடடை பாதுகாப்பதற்கு புலனாய்வு துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அரசியல் கலப்பின்றி அர்ப்பணிப்புடன் செயல்படுவதை மறந்து விட முடியாது. அவ்வாறான வீரமிகு படையினரை ஐக்கிய தேசிய கட்சி இன்று நேற்று மாத்திரம் தாரைவார்க்கவில்லை. கொடிய யுத்தம் இடம்பெ;ற்ற போது ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் மிலேனியம் சிட்டி தொடர்பாக முழு உலகிற்கும் அம்பலப்படுத்தி, வீரமிகு புலனாய்வு துறை அதிகாரிகளை புலி பயங்கரவாதிகளை கொண்டு படுகொலை செய்த வரலாற்றை ஒரு போதும் எவராலும் மறந்து விட முடியாது.

அவ்வாறான வரலாற்றுக்கு உரிமைகோரும் ஐக்கிய தேசிய கட்சி நாட்டை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயல்படும் புலனாய்வு துறை அதிகாரிகள் தொடர்பாக அம்பலப்படுத்த முன்வந்திருப்பது நாட்டை தாரைமவார்க்கும் ஒரு செயலாகும். ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீர மீண்டும் நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்கும்புலம்பெயர் தமிழர்களின் தேவையை நிறைவேற்றுகின்றார்.

(பொதுபலசேனா எனும் பயங்கரவாத அமைப்பின் பின்னால் பாதுகாப்பு அமைச்சு இருக்கின்றது. நான் அதனை தெளிவாக கூறியது மட்டுமன்றி பாராளுமன்றத்திலும் தகவல்களை அம்பலப்படுத்தினேன். இந்த அமைப்பிற்கு பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள இரகசிய கணக்கிலிருந்து பணம் கிடைப்பதாக நான் கூறினேன். பொதுபல இந்த பயங்கரவாத குழுவிற்கு இந்த நாட்டின் அதி உயர் இடத்திலுள்ள நபர்களின் அனுசரணை கிடைக்கின்றது. ஐ.ரி.என், ருபவாஹினி, தினமின, சிலுமின, டெய்லி நியூஸ் ஆகியன எதை கூறிய போதிலும் 30 ஆண்டுகள் சென்ற போதிலும் இதுவரை முடிவுக்கு கொண்டு வரவில்லை. யுத்தம் மிக தோல்விகரமாகவே முன்னெடுக்கப்படுகின்றது.)

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீரவின் இந்த கூற்று ஐக்கிய தேசிய கட்சியின் அனைவரினது கூற்றாக அமையவில்லையா? 30 ஆண்டுகால கொடிய பயங்கராவத்தை ஒழித்து வீரமிகு படையினர் தொப்பிகலயை கைமப்பற்றும் போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையை மறந்து விட முடியாது.

(தொப்பிகல என்பது ஒரு பெரும் வனமாகும். அங்கு கைப்பற்றுவதற்கு எதுவும் இல்லை. இந்த காட்டை கைப்பற்றிவிட்டு தொப்பிகலயை கைப்பற்றியதாக கூறி இருமாப்பு கொள்கின்றனர். ஆனால் இங்கு அப்படி விசித்திரமான எதுவும் இல்லை. இந்த தொப்பிகல என்பது ஒரு பெரும் காடாகும்.)

தனது தலைவரின் வழியில் சென்று நாட்டுக்கு எதிராக செயல்படும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரிஎல்ல பணம் இருந்தால் எந்தவொரு கால் நடைக்கும் யுத்தம் புரிய முடியுமென தெரிவித்த கருத்தை ஞாபகமூட்ட விரும்புகின்றோம்.

(ஆயுதம் இருந்தால் எந்தவொரு கால்நடைக்கும் யுத்தம்புரிய முடியும். இதில் எந்தவொரு அதிசயமும் இல்லை.பணம் கொடுத்து ஆயுதம் வாங்கி அந்த ஆயுதத்தை பெற்று எவருக்கும் யுத்தம் புரிய முடியும். ஆயுதங்கள் இருந்தால் போதுமானது. இதில் வேறு அதிசயப்பட கூடிய எந்தவொரு விடயமும் இல்லை.)

30 ஆண்டுகால கொடிய பயங்கரவாதத்தை ஒழித்து வீரமிகு படையினர் ஒவ்வொரு அங்குலமாக நாட்டை மீட்பெடுப்பதற்கு முன்னேறிச் செல்லும் போது அதனை சகிக்க முடியாத பயங்கரவாத பற்றாளர் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க யுத்த வெற்றியை ஏலனப்படுத்தினார்.

; (இவர்கள் கிளிநொச்சிக்கு செல்வதாக கூறிக் கொண்டு மதவாச்சிக்கு செல்கின்றார்கள். ஆணையிறவுக்கு செல்வதாக கூறிக் கொண்டு பாமன்கடைக்கு செல்கின்றார்கள். இவர்களின் யுத்த வெற்றி இதுதான் உண்மையான திசைகளை நோக்கி இவர்கள் செல்லவில்லை. யுத்தத்தினால் எதனையும் இவர்களால் கைப்பற்ற முடியவில்லை.)

இவ்வாறான வரலாற்றை கொண்ட ஐக்கிய தேசிய கட்சி இன்று நாட்டை பாதுகாப்பதற்காக உயிர் தியாகத்துடன் போராடி வரும் புலனாய்வு துறை அதிகாரிகளை தாரைவார்ப்பது ஓர் அதியமல்ல. ரணிலுக்கு முடியாதென கூறி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்ட மங்கல சமரவீர நாட்டுக்கு எதிரான அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் புலிய ஆதரவாளர்களான புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் தேசதுரோக பெரும் தாரைவார்ப்பு தொடர்பாக நாம் நிபந்தனையின்றி நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்துவோம். மங்கல சமரவீர அன்றும் இன்றும் என்றும் எப்போதும் நாட்டுக்கு எதிராக செயற்படும் ஒருவர் என்பதை நிருபித்துள்ளார். இந்த மங்கல தொடர்பாக நாம் எதிர்காலத்தில் சகல தகவல்களையும் உண்மையாகவும் சரியாகவும் அம்பலப்படுத்த தாயகத்தி;ன் அலைவரிசை தயாராகவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com