அமைச்சர் டிலானின் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பணமோசடி !!!
அமைச்சர் டிலான் பெரேராவின் இணைப்புச் செயலாளர் எனக் கூறிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர் பதுளையில் கைது செய்யப்பட்டுள்ளார். தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி இது வரை இந்தப் பெண் 13 இலட்ச ரூபாவை மோசடி செய்துள்ளார். இவருக்கு எதிராக இதுவரை 17 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ரக்வான, காலி, கொடகவெல, நிவித்திகல, அக்குறஸ்ஸ, கலஹிட்டிய போன்ற பகுதிகளுக்குச் சென்று அங்கு ஆட்களை மோசடி செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஒவ்வொருவரி டமிருந்தும் தலா 2 முதல் 3 இலட்சம் ரூபா வரையில் மோசடி செய்துள்ளார்.
இத்தாலியில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கான பட்டியலில் பெயரை உட்படுத்துவதாகவும் தென் கொரியாவுக்கு அனுப்புவதாகவும் கூறி இப்பெண் பணமோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரின் இணைப்புச் செயலாளரினால் தாம் ஏமாற்றப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு செய்த முறைப் பாட்டையடுத்து அமைச்சர் டிலான் பெரேராவின் பணிப்புரைக்கு அமைய அதிகாரிகள் விசாரணை களை ஆரம்பித்தனர்.
பணியகத்தின் சட்டப் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் கீர்த்தி முத்து குமாரணவின் ஆலோசனைக்கமைய பதுளையில் வைத்து இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பசறை வீதியில் தற்காலிக வீடொன்றில் வகித்து வந்த தனுரா நவமி ராஜபக்ஷ என்ற சந்தேக நபரான பெண் அமைச்சிலோ, அல்லது அமைச்சரின் அலுவலகத் திலோ, பணியகத்திலோ எந்தவித பதவியையும் பெறவில்லை. அங்கு தொழில் புரிபவரும் அல்ல, என பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.
வெளிநாடு செல்வதற்காக குறித்த தனுரா நவமி ராஜபக்ஷ என்ற பெண்ணிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்கள் இருப்பின் உடனடியாக பணி யகத்தின் சட்டப்பிரிவின் 011-2864118 அல்லது 24 மணி நேரமும் தொழிற்படும் 011-2879900/ 0112879901/ 011-2879902 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறும் பணியகம் கேட்டுக் கொள்கிறது.
0 comments :
Post a Comment