Monday, June 16, 2014

நாகதம்பிரான் ஆலய தூபியில் சொட்டும் அதிசயம் திரவம் ! (படங்கள்)

வவுனியா புதூர் வரலாற்று பெருமை கொண்ட நாகதம்பிரான் ஆலயத்தின் வசந்த மண்டப சுவர்களின் ஒன்பது இடங்களில் இருந்து பால் போன்ற ஒரு திரவம் வெளியேறிக் கொண்டி ருப்பதை அவதானிக்க முடிகின்றது. இச்செயற்பாடு நான்கு, ஐந்து நாட்களாக நடைபெறலாம் என்று ஊகிக்க ப்படுகின்ற போதும் நேற்று காலை பத்து மணியளவிலேயே ஆலய நிர்வாகத்தினர் அவதானித்துள்ளார்கள்.

ஆலய சுவர்களில் இருந்து மேற்படி பால் போன்ற திரவம் வடிவதற்கான சந்தர்ப்பங்கள் எவையும் இல்லை. இது ஓர் அபூர்வ நிகழ்வாக உள்ளதுடன் தற்போதும் துளித்துளியாக திரவம் சொட்டிக் கொண்டிருப்பதையும் காணக்கூடி யதாக உள்ளது. மேற்படி திரவம் வடியும் சுவர்களின் நிறப்பூச்சு உரிந்து காணப்படுகின்றதுடன் திரவம் விழுகின்ற இடத்தில் மெழுகுவர்த்தி உருகி காணப்படும் தன்மையைப்போல வெண்மையாகவும் காணப்படுகின்றது.

பொதுமக்கள் தொடர்ச்சியாகச் சென்று இதனைப் பார்வையிட்டு வருகின்றனர். எதிர்வரும் இருபத்துமூன்றாம் திகதி இந்த ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com