கடந்த ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருது விராத் கோஹ்லிக்கு!
கடந்த வருடத்திற்கான சியெட் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் விராத் கோஹ்லி கடந்த ஆண்டுக்கான சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டதுடன், ரவி அஸ்வின், சிறந்த இந்திய வீரருக்கான விருதினை தட்டிச்சென்றார். இவருக்கான விருது, முன்னாள் கிரிக்கட் வீரர் வி.வி.எஸ். லக்ஸ்மன் வழங்கினார்.
இந்தியாவின் முன்னாள் விக்கட் காப்பாளர் 1983ம் ஆண்டு வெற்றி அணியில் இடம்பெற்றவருமான ஸெய்யத் கிரிமாணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அண்மையில் ஐ.பீ.எல். தொடரில் சம்பியனான கொல்கட்டா அணியின் ரொபின் உத்தப்பா, இவ்வாண்டுக்கான சிறந்த உள்ளுர் வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன் கடந்த ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீரராக சிகர் தவான் தெரிவு செய்யப்படடதுடன், ரி20 வீரராக பங்களாதேஸ் அணியின் ஷகீபுல் ஹஸன் தெரிவு செய்யப்பட்டார். டெஸ்ட் வீரராக அவுஸ்திரேலிய அணியின் மிச் ஜோன்ஸன் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, பிரபல்யமிக்க வீரர் என்ற விருது வழங்கப்பட்டது. சிறந்த இளம் வீரராக விஜய் ஷோல் தெரிவு செய்யப்பட்டார்.
0 comments :
Post a Comment