Wednesday, June 11, 2014

உலகக்கிண்ண கால்பந்துப் போட்டி முடிவுகளை கில்லியாக கணித்துச் சொல்லும் நெல்லி !!

கடந்த உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் அணிகளின் வெற்றி தோல்வியை கணிக்கும் ஒக்டோபஸ் இறந்து விட்ட நிலையில், புது உயிரினம் வந்து விட்டது. கடந்த உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் போது பால் என்று பெயரிடப்பட்ட ஒக்டோபஸ், அணிகளின் வெற்றியை சரியாக கணித்தது. தண்ணீர் தொட்டிக்குள், விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகளை வைத்து ஒக்டோபஸ் அதில் எந்த கொடியை தொடுகிறதோ அந்த கொடியையுடைய நாடுதான் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் போட்டித்தொடர் முடிந்த சில நாட்களிலேயே ஒக்டோபஸ் உயிரிழந்தது.இந்த முறை ஒக்டோபஸ் இல்லாததால் யார் கணிப்பார்கள் என்ற கவலையில் ரசிகர்கள் இருந்தனர்.

ரசிகர்கள் கவலையை போக்க குரங்கு, முள்ளம்பன்றி, இறால் ஆகிய உயிரி னங்களை சில உள்ளூர் போட்டிகளில் களமிறக்கி சோதித்து பார்த்தனர். ஆனால் அவற்றின் கணிப்பு தவறாகிவிட்டது. ஒக்டோபஸ் அளவுக்கு யார் சரியாக கணிப்பார் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் விளையாட்டு ஆர்வலர்களின் மனக் குறையை நீக்க ஜெர்மனியில் உள்ள நெல்லி என்ற பெயர் கொண்ட யானை இந்த களத்தில் இறங்கியுள்ளது. பல்வேறு கால்பந்து போட்டிகளை சரியாக கணித்ததால் நெல்லி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com