கணவர் மற்றும் குழந்தைகள் கண்முன்னே இளம்பெண் ஒருவரை பாலியல் பாலாத்காரம் செய்து கொலை!
மேகாலயாவில் தாம் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளா வதை எதிர்த்து போராடிய இளம்பெண் ஒருவர், தீவிர வாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல், நேற்று முன்தினம் (2ஆம் தேதி) பெண் நீதிபதி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு முயன்று, கொலை செய்ய முயற்சித்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மேகாலயாவில் இளம்பெண் ஒருவரை அவரது கணவர் மற்றும் குழந்தைகள் கண்முன்னே தீவிரவாதிகள் பலாத்காரம் செய்ய முயற்சித்த நிலையில், அதனை அவர் எதிர்த்து போராடியதால் கொலை செய்த சம்பவம் மேலும், அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயா மாநிலம், தெற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட கரோ தேசிய விடுதலை முன்னணி இயக்கத்தை சேர்ந்த தீவிரவாத கும்பல் ஒன்று நேற்று (3ஆம் தேதி) மாலை ஒரு கிராமத்திற்குள் புகுந்துள்ளனர். அப்போது அங்கு தனது கணவர், குழந்தைகளுடன் வீட்டில் இருந்து 35 வயது இளம்பெண் ஒருவரை, தீவிரவாதக் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அதற்கு முன்னர் அவரின் கணவர் மற்றும் குழந்தைகளை வீட்டிற்குள் வைத்து பூட்டியுள்ளனர். தங்கள் கண் முன்னே தாய்க்கு நடந்த கொடுமையை பார்த்த குழந்தைகள் கதறி அழுதுள்ளனர்.
இந்நிலையில் பலாத்காரத்தை எதிர்த்து போராடியதால், அந்த இளம்பெண்ணை, தீவிரவாதிகள் கட்டுமிராண்டித்தனமாக தலையில் அடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 comments :
Before you see the dust on other's eye,just see that you have a log in your eyes.It will many many years India to get rid of this unbelievable inhuman brutality behaviour.
Post a Comment