Monday, June 9, 2014

மு.கா. வெட்டித்தனமாக அறிக்கை விடுவத்தைத் தவிர மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை – அமைச்சர் றிசாத்

இலங்கை முஸ்லிம் சமுகத்தின் கட்சியும், தேசியத் தலைவரும் அ. இ. ம. காங்கிரஸூம் அதன் தலைவர் றிசாத்; பதியுதீனுமே. மு.கா இன்று காய்ந்த சருகாக உதிர்ந்து கொண்டிருக்கின்றது.

‘அமைச்சர் றிசாத்திற்கு மு.கா. பதிலடி’ என்ற தலைப்பில் திருகோணமலை மு.கா. மத்திய குழு விடுத்துள்ள அறிக்கைக்கு ‘செம அடி’ எனும்
தலைப்பில் அ.இ.ம.காவின் திருகோணமலை மத்திய குழு விடுத்துள்ள பதில் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியொன்றுதான் முஸ்லிம் சமுகத்தின் உரிமை. அது கிடைத்துவிட்டால் எல்லாம் சரி என்ற நிலைக்கு இன்று மு.கா வந்துள்ளதை எண்னி முஸ்லிம் சமுகம் வேதனைப்படுகின்றது.

முஸ்லிம் கரையோர மாவட்டம் மறைந்து, முஸ்லிம் தணி அலகு புதைக்கப்பட்டு, முஸ்லிம் அரச அதிபர் தூக்கி வீசப்பட்டு வாக்களித்த முஸ்லிம்களை மறந்து மு.கா எங்கோ பயணித்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த முதலமைச்சர் பதவி கோஷம் சிறந்த சான்றாக உள்ளது. முஸ்லீம்களின் அசைக்கமுடியாத ஆணிவேராக அன்று இருந்த மரம் – இன்று காய்ந்து சருகாக உதிர்ந்த வண்னம் உள்ளது. ஆனால் எமது கட்சியான அ.இ.ம. கா. கடந்த 6 வருட காலத்திற்குள் முஸ்லிம் சமுகத்தின் ஆணிவேராக விருட்சமாக உருவெடுத்துள்ளது. நாடாளுமன்றில் 3 உறுப்பினர்களையும். வடக்கு, கிழக்கு மாகாணசபைகளில் 6 உறுப்பிணர்களையும் மேல் மாகாணசபையில் 1 உறுப்பினரையும், காத்தாண்குடி, ஓட்டமாவடி, மற்றும் முசலி உள்ளுராட்சி மன்றங்களை தனது கட்டுப்பாட்டிலும், கிண்னியா முசலி உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் பதவியைப் பெற்றும் 60 க்கும் மேற்பட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பிணர்களைக் கொண்டும் பலமிக்க கட்சியாக இன்று நாம் உள்ளோம். இதன் முலம் முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சி மு.காதான் என்ற கோஷம் துடைத்தெறியப்பட்டு விட்டது. இந்தக் கோஷத்தை இன்னும் இன்னும் உரத்துக் கூறுவதை மு.காவும் அதன் போராளிகளும் இன்றுடன் நிறைவுக்குக் கொண்டு வருதல் வேண்டும்.

மு.காவின் கோட்டையாக வர்ணிக்கப்பட்ட மட்டு. மாவட்டம் இன்று அ.இ.ம.காவின் கோட்டை என்பதை மு.காவின் திருமலை மத்திய குழு மறந்திருக்க மாட்டாது. வண்னி மாவட்டம் அ.இ.ம.காவின் இராஜ்ஜியம் என்பதையும் இந்த மத்திய குழுவில் உள்ள மேதாவித்தனம் பிடித்தோர் ஞாபகத்தில் கொள்ள வேண்டுமென்று இறைவனுக்கு பயந்தவர்களாக இறுமாப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

மு.காவின் தலைவர் றவூப் ஹக்கீமின் அரசியல் சானக்கியம் என்ன என்பதை கடந்த வாரம் நாடாளுமன்றிலும், அண்மையில் ஜனாதிபதி வெளியோ “போ” என்று கூறியதன் முலமும் நாட்டு மக்கள் நன்கு அறிந்து விட்டார்கள்.

உண்மையான மனச்சுத்தியும் அரசியல் சானக்கியமும், கிழக்கு முஸ்லிம்கள் மீது பாசமும் பிரியமும் மு.காவுக்கும் அதன் தலைமைக்கும் இருக்குமானால் முதலமைச்சர் பதவியை மு.கா. ஒருவருக்கு பெற்றுக் கொடுக்கட்டும் என்று இச் சர்ந்தர்ப்பத்தில் சவால் விடுக்கின்றோம். மு.கா. உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கிவிட்டால் அது தனது தலைமைக்கு ஆபத்தாகிவிடும் என்று அன்று தொட்டு நிணைத்து வரும் ரவுப் ஹக்கிம் ஒருபோதும் முதலமைச்சர் பதவியை கட்சிக்கு பெற்றுக் கொள்ளப்போவதில்லை. மாறாக, மக்களை ஏமாற்ற அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பாக இந்த முதலமைச்சர் பதவியை சாட்டாக வைத்து அரசிலிருந்து வெளியேறுவதற்கே அதனைப் பயண்படுத்துவார் என்பதை இச் சர்ந்தப்பத்தில் மிக உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

எனவே, வெட்டித்தனமாக இவ்வாறான அறிக்கைகளை விடுப்பதை விடுத்து ஆரோக்கியமான சிந்தனைகளை வளர்த்து அ.இ.ம.காவின் மற்றுமொறு கோட்டையாக வளர்ந்துகொண்டு இருக்கும் திருமலை மாவட்டத்தையும் மக்களையும் முன்னேற்றம் அடையச் செய்ய மு.கா. வின் திருமலை மத்திய குழு எம்முடன் கைகோர்க்க வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் வேண்டிக் கொள்கின்றோம்.

(அஸ்ரப் ஏ சமத்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com