Sunday, June 29, 2014

துப்பாக்கி ஒன்றினைக் கொள்வனவு செய்யப்போகின்றாராம் அனந்தி! பொதுமக்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்கவா இந்த நாடகம்??

தனக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப் பட்டிருப்பதைத் தொடர்ந்து தனது பாதுகாப்பிற்காக துப் பாக்கி ஒன்றினைக் கொள்வனவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் மாகாண சபை அமர்வில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உறுப்பினர் அனந்தி தனக்கு எவரால் ஆபத்து ஏற்படுமென வெளிப் படையாகத் தெரிவிக்க வேண்டு மெனவும், வடக்கில் படையினரை வெளி யேறுமாறு கோரிவரும் அவர் எவ்வாறு பொலிஸாரின் பாதுகாப்பைக் கோருவார் எனவும் யாழ் மக்கள் கேள்வியெழுப் பியுள்ளனர்.

தேர்தலின்போது உறுதியளித்தவாறு மக்களுக்கு எந்தவிதமான சேவையையும் செய்யாது, கடந்த நான்கு வருடங்களாக மக்கள் பணியாற்றி வந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் குழப்பியமையால் பொதுமக்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்கவா இவர்கள் பொலிஸ் பாதுகாப்பினைக் கோருகிறார்கள் எனவும் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

எமது மக்கள், எமது பிரதேசம், எமது மாகாண சபை, எமது ஆட்சி எனக் கூறிவரும் தமிழ்க் கூட்டமைப்பின் வடமாகாண சபையினர் பாதுகாப்பிற்கு மட்டும் பொலிஸாரை அழைப்பது ஏன் எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தாம் மிகுந்த அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில், அரசியல் பணியினை தொடர்ந்து கொண்டிருப்பதாக பாதுகாப்பு நீக்கப் பட்டிருக்கும் மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்த கருத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்றால் நவீன துப்பாக்கிகளை வழங்குங்கள் என வடமாகாண சபை உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்..

அனந்தி சசிதரன் உள்ளிட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பு தேவையென்றால் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் அனந்தி உள்ளிட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட போது அது தற்காலிகமானது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவர்களும் தமக்கு தொடர்ச்சியான பாதுகாப்பு தேவை என்று விண்ணப்பிக்கவில்லை. என்றும் இது தொடர்பில் பொலிஸ் ஊடுகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்..

அந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் எழுத்து மூலமாக விண்ணப்பிக்காத காரணத்தினால் தற்காலிக பாதுகாப்பை இதற்கு மேல் நீடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com