வதந்திகளை நம்ப வேண்டாம் - பொலிஸார் கோரிக்கை!
பாணந்துறையில் நோ லிமிட் நிறுவனத்தின் தீ பரவல் தொடர்பில் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொலிஸார் கோரி யுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக சில சக்திகளால் வன்முறைகள் இடம் பெற்று வரும் நிலையில் நேற்று அதிகாலை பாணந் துறையில் உள்ள நோலிமிட் நிறுவனத்தில் தீப்பரவல் ஏற்பட்டது.
எனினும் இது நாசகார வேலையா? அல்லது மின்சார ஒழுக்கினாலா? ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எனவே, இந்த நிறுவனத்துக்கு தீவைக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் அவதானப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று பொலிஸார் கேட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment