Wednesday, June 4, 2014

நாங்கள் நட்டத்தில் வீழ்வோம்.. பால்மாவின் விலையில் அதிகரிப்பு வேண்டும்! - பால்மா நிறுவனங்கள்

இறக்குமதி பால்மாக்களுக்கான வரி அதிகரிப்பு காரணமாக 400 கிராம் பால்மா பைக்கற்று ஒன்றின் விலையை ரூபா 386 இற்கு வழங்குவதற்கு கடினமானது என பால்மா உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.

தற்போதைய சந்தையில் பால்மாவின் விலை குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டாலும், அதன் நன்மையை பால்மா நிறுவனங்களோ, இறக்குமதியாளர்களோ இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை எனவும் அவ்வாறான நிலைமையில் தீர்வை வரியை ரூபா 25 இனால் குறைப்பதானது அநீதியானது எனவும் பால்மா நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த காலங்களில் உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்தபோது, பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு நிறுவனம் அனுமதி கோரியிருந்தாலும், ஒன்றரை ஆண்டுகள் வரை விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்காமை பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெளிவுறுத்துகின்றது.

வரியை 68 இலிருந்து 43 வரை குறைப்பது தொடர்பில் பால் மா இறக்குமதியாளர்கள், நிறுவனங்கள் திரைசேறியுடன் ஆலோசனை செய்யவுள்ளது.

(கேஎப்)

0 comments :

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com