போட்டி போட்டு ஓடிய பஸ்களில் முந்தி ஓடியவர் வீட்டிற்குள் புகுந்தார்...( படங்கள்)
சங்கானை 7ம் கட்டடைப் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற இந்த விபத்தில் பயணிகள் சிறிய காயங்களுடன் தெய்வாதீனமாகத் தப்பியுள்ளனர். பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காரைநகரில் இருந்து யாழ் வந்து கொண்டிருந்த அரச பேரூந்து தனியார் மினிவானுடன் போட்டி போட்டு முந்திச் செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்து கொண்டிருந்த ஐஸ்கிறீம் வானுடன் மோதி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து கொண்டது.
0 comments :
Post a Comment