Monday, June 9, 2014

உடற்பயிற்சியில் ஈடுபடும் பராக் ஒபாமாவின் புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ச்சி ! !

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உடற்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியாகி யுள்ளமையால் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். ஐரோப்பா சுற்றுலா மேற்கொண்டு போலந்து நாட்டுக்குச் சென்ற பராக் ஒபாமா, அந்நாட்டின் தலைநகர் வோர்ஸோவிலுள்ள மெரியொட் எனும் 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இந்நிலையில் தனது இறுக்கமான பணிகளிடையே நேரம் ஒதுக்கி அங்குள்ள தனியார் உடற் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு ஒபாமா உடற்பயிற்சி மேற்கொண்டதனை அதிகாரபூர்வமற்ற முறையில் இனந்தெரியாதவர்கள் இரகசியமாக புகைப்படமெடுத்து வெளியிடப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் எவ்வாறு புகைப்படங்கள் கசிந்துள்ளன எனவும் விசாரணைகளை முன் னெடுத்துள்ளனர். இதனையடுத்து மேற்படி ஹோட்டலிருந்து வெளியேறி யுள்ளார். அத்துடன் அவரது பாதுகாப்புகள் மேலும் அதிகரிக்க ப்பட்டுள்ளன. இது குறித்த தகவல்களை போலந்து நாட்டின் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளன.

இது குறித்து போலந்து புகைப்படக் கலைஞர் ஒருவர் கூறுகையில், அந்த உடற்பயிற்சி நிலையத்தை எனக்குத் தெரியும். வெளியில் இருந்தவாறு இப் புகைப்படங்களை எடுத்திருக்க வாய்ப்பில்லை. இது மறைத்து வைக்கப்பட்ட கெமரா அல்லது உள்ளிருந்தவர்களாலேயே எடுக்கப்பட்டிருக்கும்' எனத் தெரிவி த்துள்ளார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com