கனகராஜன் குளத்தில் இரு சிறுவர்களைக் கடத்திய சாரதி கைது !!
கனகராயன்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் இருவரைக் கடத்திய டிப்பர் சாரதி திரியந்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் புதன்கிழமை நடைபெற்று ள்ளது. சம்பவம் பற்றித் தெரியவருவதாவது- கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஆலங்குளப் பகுதியைச் சேர்ந்த க.சஞ்சே (வயது 12), இ.நிரோன் (வயது 14) ஆகிய இருவருமே கடத்தப்பட்ட சிறுவர்களாவார். இவர்கள் அண்மைக் காலமாக பாடசாலைக்கு வரும் போது டிப்பர் சாரதி இம்மாணவர்களை கண்டு தினமும் தம்முடன் வருமாறும் தாம் உங்களைச் சந்தோசமாக வைத்திருக்கிறார் எனக் கூறி அழைத்துள்ளார்.
அதேபோல் நேற்றும் இவர்களை அழைத்த போது இவருடன் செல்வதற்கு ஏற்கனவே தயார் செய்தபடி வந்த சிறுவர்கள் பெற்றோருக்குத் தெரியாமல் பாடசாலைக்குச் செல்வதாகக் கூறியுள்ளனர். அதன் பின்னர் பாடசாலைச் சீருடையை மாற்றி வேறு உடை அணிந்து டிப்பர் சாரதியுடன் ஏறிச் சென்றுள்ளனர். டிப்பர் சாரதியும் அவர்களை ஏற்றிக் கொண்டு சென்று அநுராதபுரம் தாண்டிச் சென்ற போது அச் சிறுவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். உணவிற்காக கடை ஒன்றில் டிப்பரை நிறுத்திய போது இரு சிறுவர்களும் ஓடித் தப்பியுள்ளனர்.
இரவு நேரத்தில் வழி தெரியாது தடுமாறிய சிறுவர்கள் வீதியால் வந்த இராணுவத்தினரிடம் வழி கேட்டுள்ளனர். சந்தேகம் கொண்ட இராணுவ வீரர் இருவரையும் அருகிலிருந்த பிரியந்தனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்களை விசாரித்த பொலிஸார் டிப்பர் சாரதியைக் கைது செய்ததோடு பெற்றோருக்கு தகவலைத் தெரியப்படுத்தி இரு சிறுவர்களையும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
0 comments :
Post a Comment