Thursday, June 19, 2014

போர்க்குற்ற விசாரணைக் குழுவின் அறிக்கை செப்டம்பரில்…!

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இலங்கையில் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பிலான ஆணையாளர் அலுவலகம் நியமித்துள்ள விசாரணைக் குழுவின் முதலாவது அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

சர்வதேசத்தின் விமர்சனத்திற்குட்பட்ட அரச இராசதந்திரியான பிரித்தானியரான திருமதி செண்ட்ரா பெய்டாஸின் தலைமையின் கீழ் உறுப்பினர்கள் 12 பேரைக் கொண்ட இவ்வாய்வுக் குழு ஜூலை மாதம் நடுப்பகுதியிலிருந்து உத்தியோகபூர்வமாக ஆய்வினை ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இவ்வாய்வுக் குழுவில் காம்போஜ் கெரில்லா அமைப்பின் போர்க்குற்றங்கங்களை ஆய்வதற்காக நியமிக்கப்பட்ட சர்வதேச போர்க்குற்ற நீதிமன்ற நீதிபதியும் நியூசிலாந்தைச் சேர்ந்தவருமான சில்வியா கார்ட் ரைட், ஏனைய அங்கத்தவர்கள் 12 பேரும் உள்ளடங்குவர். இவர்கள் ஒருவரேனும் இலங்கைக்கு வருகை தராது அங்கிருந்து ஆய்வினை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் பெரும்பாலும் இருப்பதாக ஜெனீவா தூதுவராலய செய்திகள் குறிப்பிடுகின்றன.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com